வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட்களில் வரலாறு படைத்த பும்ரா…

2 weeks ago 18

Last Updated:January 04, 2025 7:46 PM IST

இன்னுமொரு சாதனையாக சிட்னி மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார்.

News18

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பும்ரா தனது அதிரடியான பவுலிங்கால் அணிக்கு பலம் சேர்த்து வருகிறார்.

தற்போது 5 ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வரும் சூழலில் பும்ரா இன்று காலை ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் விக்கெட்டை கைப்பற்றியதன் முலம் இந்த தொடரில் பும்ரா 32 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார்.

வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய பவுலர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டாக இது அமைந்தது. முன்னதாக 1977-78 இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரின் போது இந்திய அணியின் பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றியது சாதனையாக இருந்தது. அதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.

வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் விபரம்-

ஜஸ்பிரித் பும்ரா – 32* விக்கெட் (ஆஸ்திரேலியா, 2024-25)

பிஷன் சிங் பேடி – 31 விக்கெட் (ஆஸ்திரேலியா, 1977-78)

பகவத் சந்திரசேகர் – 28 விக்கெட் (ஆஸ்திரேலியா, 1977-78)

சுபாஷ் குப்தே – 26 விக்கெட் (வெஸ்ட் இண்டீஸ், 1952-53)

கபில் தேவ் – 25 விக்கெட் (ஆஸ்திரேலியா, 1991-92)

இன்னுமொரு சாதனையாக சிட்னி மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க - IND vs AUS | கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..? - மவுனம் கலைத்த ரோகித் சர்மா..!

2001-இல் இந்தியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது, ​​3 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை ஹர்பஜன் சிங் கைப்பற்றினார். அந்த சாதனையை பும்ரா சமன் செய்துள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கு பும்ராவுக்கு இன்னும் ஒரேயொரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

First Published :

January 04, 2025 7:46 PM IST

Read Entire Article