Updated: Wednesday, January 8, 2025, 13:42 [IST]
சுய தொழில் செய்து அதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதை செயல்படுத்தி சிலர் வெற்றியும் கண்டுவிடுவர். அப்படித்தான் ஒரு பெண் குங்குமப்பூ உற்பத்தியில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பார்த்து வருகிறார். அவருக்கு இந்த சிந்தனை எப்படி தோன்றியது? எந்தெந்த நுட்பங்களை பயன்படுத்தி குங்குமப்பூ உற்பத்தி செய்கிறார்? என்ற விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
2020-ஆம் ஆண்டில் சுஜாதா அகர்வால் என்ற பெண்மணி தினசரி பூஜை செய்யும் போது குங்குமப்பூக்களை பயன்படுத்தியுள்ளார். அப்போதுதான் அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. இப்படி அதிக விலை கொடுத்து குங்குமப்பூக்களை வாங்குவதற்கு பதிலாக நாமே அதை பயிரிட்டால் என்ன? என்று யோசிக்கத் தொடங்கியுள்ளார்.
அதற்காக விவரங்களை இணையத்தில் தேடியுள்ளார். குங்குமப்பூ சாகுபடி அதன் விவசாயம் உட்பட ஏராளமான தகவல்களை ஆராய்ச்சி செய்துள்ளார். அதிலிருந்து அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தானும் குங்கும பூ விவசாயத்தை முயற்சிக்க விரும்புவதாக அவருடைய கணவரிடம் கூறியுள்ளார்.
ஜார்சுகுடா பகுதியில் வசித்து வருகிறார் சுஜாதா. இந்தப் பகுதி முழுவதுமே ஒரு தொழில் துறை மையமாக உள்ளது. முக்கியமாக உலோகத் தோழில் செய்பவர்கள் தான் இங்கு அதிகம். எனவே விவசாயம் அரிதாகவே இப்பகுதியில் நடைபெற்றது. மேலும் இதுவரையில் யாரும் ஏரோபோனிக்ஸ்-ஐ பயன்படுத்தி உட்புற குங்குமப்பூ விவசாயத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே ஆபத்து அதிகம் இருக்கும் என்றும் தெரிந்தும் தான் ஒரு குங்குமப்பூ விவசாயியாக மாற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் சுஜாதா. ஏரோபோனிக்ஸ் என்பது மண் அல்லது நீர் போன்ற அடிப்படை விஷயங்கள் இல்லாமல் காற்று மற்றும் மூடுபனி சூழலை பயன்படுத்தி தாவரங்களை வளர்ப்பதாகும்.
தற்போது ஏரோபோனிக்ஸ் குங்குமப்பூ விவசாயம் பிரபலமடைந்து வருகிறது. காரணம் காஷ்மீரில் குங்குமப்பூ உற்பத்தி குறைந்து வருகிறது. அதோடு உட்புற சாகுபடிக்கான குறைந்த செலவாக இந்த செயல்முறை இருப்பதால் பலர் ஏரோபோனிக்ஸ் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவில் குங்குமப்பூ தேவை ஆண்டுக்கு சுமார் 100 டன்கள். ஆனால் உள்நாட்டு உற்பத்தி வெறும் 5 முதல் 7 டன்களாக மட்டுமே உள்ளன. அதுவும் முக்கியமாக ஜம்மு & காஷ்மீர் பகுதிகளிலிருந்து தான் இந்த உற்பத்தியும் கிடைக்கிறது. மீதமுள்ளவை ஈரான், ஸ்பைன் மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
100 சதுர அடி அறையில் குங்குமப்பூவை வளர்க்க சுஜாதா முடிவு செய்தார். அதன் பிறகு காஷ்மீர் போன்ற காலநிலையை உருவாக்க குளிர்ரூட்டிகளையும் பயன்படுத்தியுள்ளார். ஏரோபோனிக்சை பயன்படுத்தி குங்குமப்பூவை வளர்ப்பதற்காக ராக்குகளை அமைத்துள்ளார்.
சுஜாதா காஷ்மீரில் இருந்து குங்குமப்பூ விதைகளை வாங்கி தனது முயற்சிக்கு "ப்ளூம் இன் ஹைட்ரோ" என்று பெயரிட்டார். சுமார் 250 கிலோ விதைகளை, கிலோ ஒன்றுக்கு 1,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இதற்காக 2.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். உட்புற குங்குமப்பூ விவசாயத்திற்கு 4 முக்கிய அம்சங்கள் தேவை வெப்பநிலை, ஈரப்பதம், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஒளி. குங்கும பூவிற்கு 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஈரப்பதம் தேவை. ஈரப்பதத்தை பராமரிக்க ஒரு டி-ஹைமிடிஃபையர் தேவை.
அதன் பிறகு விதைகளை ஒரு தட்டில் வைத்துள்ளார். அதிலிருந்து 15 நாட்களுக்குள் தளிர்கள் தோன்ற ஆரம்பிக்கும். சுமார் 7 வாரங்களுக்கு பிறகு குங்குமப்பூ பூக்கள் உற்பத்தி ஆகிவிடும். தற்போது வருடத்திற்கு 2 முறை குங்குமப்பூ அறுவடை செய்து வருகிறார். ஒவ்வொரு முறையும் 450 கிராம் உற்பத்தி செய்கிறார். மொத்தம் ஆண்டு உற்பத்தியாக 900 கிராம் வரை கிடக்கிறது. இதை ரூ.9 லட்சத்திற்கு விற்பனை செய்கிறார்.
குங்குமப்பூ விற்பனை மட்டுமின்றி சருமத்திற்கு தேவையான சீரம் ஆகியவற்றையும் சுஜாதா தயார் செய்கிறார். 30 மில்லி பாட்டில் சீரமை பாட்டில் ஒன்றுக்கு 400 என்ற விலையில் விற்பனை செய்கிறார். அதோடு கஹுவா டி என்ற டீ தூளையும் விற்பனை செய்கிறார். இதை கிலோ ஒன்றுக்கு 2500 ரூபாய்க்கு வழங்கி வருகிறார். இதன் மூலமும் மாதம் 13,000 வரை சம்பாதிக்கிறார்.
ஆக குங்குமப்பூ, சீரம்,கஹுவா டி போன்றவற்றின் விற்பனையின் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் வரை வருமானம் பெறுகிறார். மண், உரம், நீர் இல்லாமல் சுஜாதா உற்பத்தி செய்யும் குங்கும பூக்களின் போட்டோவை பாருங்கள். புதுமையான நுட்பத்தை பயன்படுத்தி தற்போது அதிக வருமானம் பார்த்து வருகிறார்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Woman Cultivates Saffron in 100 Sq. Ft. Room, Sells for Rs.10 Lakh Per Kg
Learn how a woman grows saffron in a 100-square-foot room and sells it for Rs.10 lakh per kg. A remarkable story of innovation and profit!
-
Block for 8 hours
-
Block for 12 hours
-
Block for 24 hours
-
Don't block