Kitchen Hacks | வெங்காயங்களை வெட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அதனை ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். ஏனெனில் குளிர்ந்த நிலையில் இருக்கும் பொழுது வெங்காயங்களில் உள்ள என்சைம்கள் வேலை செய்யாது. இதனால் அது உங்களுடைய கண்களில் எந்த ஒரு எரிச்சலையும் ஏற்படுத்தாது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 8, 2025, 1:25 PM IST Published by
Soundarya Kannan
01
சமையல் என்பது ஒரு கலை. இதற்கு அதிக பொறுமை தேவை. அதிலும் குறிப்பாக சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்குவது ஒரு பெரிய டாஸ்க் என்று பலர் சொல்லுவார்கள். இதன் காரணமாகவே சமைப்பதற்கு டிமிக்கி கொடுப்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் சமையலை நாம் அவ்வளவு காம்ப்ளிகேட் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
02
புத்திசாலித்தனமான சில குறிப்புகளை பின்பற்றினாலே விரைவாக, அதே நேரத்தில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமையல் செய்து முடித்துவிடலாம். அந்த வகையில், சமையல் செய்வதற்கு பலரை பயப்பட வைப்பது வெங்காயம் தான். ஏன் என்ற காரணத்தை கேட்கவே தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததே. வெங்காயத்தை உரித்தாலோ அல்லது வெட்டினாலோ கண்களில் இருந்து வரும் கண்ணீர் நம்மை அந்த அளவுக்கு பயமுறுத்தி வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
03
வெங்காயத்தை வெட்டுபவருக்கு மட்டுமல்லாமல், அவருக்கு அருகில் இருப்பவர்களுக்கும் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு அதற்கு சக்தி உண்டு. ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கும் அல்லவா?. அதைப்போலவே வெங்காயத்தை வெட்டும் பொழுது கண்களில் எரிச்சல் மற்றும் கண்ணீர் வராமல் இருப்பதற்கும் ஒரு சில வழிகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
04
வெங்காயத்தை வெட்டும் பொழுது கூர்மையான கத்தியை பயன்படுத்துங்கள். இது கேட்பதற்கு சற்று வினோதமாக இருந்தாலும், இந்த முறை நிச்சயமாக வேலை செய்யும். கூர்மையான கத்தி வெங்காயத்தின் செல்களுக்கு குறைவான சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வெங்காயத்தில் இருந்து அதிக அளவு என்சைம்கள் வெளியிடப்படாது. இதனால் உங்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது குறையும். வெங்காயத்தில் அதிக என்சைங்கள் இருக்கிறது. எனவே அதனை முதலில் வெட்டி விடுங்கள். அதன் பிறகு மற்ற காய்கறிகளை வெட்டலாம்.
05
நெருப்பு முன்பு அமர்ந்து வெங்காயங்களை வெட்டும் பொழுது கண்களில் கண்ணீர் வராது. ஏனெனில் நெருப்பில் உள்ள சல்பர், வெங்காயத்தில் உள்ள என்சைம்களை வலுவிழக்க செய்கிறது. எனவே இதற்காக நான் நெருப்பை கொளுத்தி வைக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். அது அப்படி கிடையாது. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு அதன் முன்பு அமர்ந்து வெங்காயத்தை வெட்டிப் பாருங்கள்.
06
உங்கள் வீட்டின் சமையலறையில் புகை கூண்டு அல்லது சிம்னி இருந்தால் அதன் கீழ் நின்று வெங்காயங்களை வெட்டுங்கள். இது அனைத்து வாயுக்களையும் வெளியேற்றி, உங்கள் கண்களில் அது படாதவாறு பாதுகாக்கும். எனினும் உங்களுடைய சிம்னி எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதை பொறுத்து இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
07
வெங்காயங்களை வெட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அதனை ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். ஏனெனில் குளிர்ந்த நிலையில் இருக்கும் பொழுது வெங்காயங்களில் உள்ள என்சைம்கள் வேலை செய்யாது. இதனால் அது உங்களுடைய கண்களில் எந்த ஒரு எரிச்சலையும் ஏற்படுத்தாது.
08
வெங்காயத்தை நறுக்கி 15 முதல் 20 நிமிடங்களுக்கு அதனை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இது அவற்றில் உள்ள சல்பினிக் அமிலத்தை அகற்றிவிடும். ஆனால் இதனால் வெங்காயத்தின் மொறுமொறுப்பு தன்மை குறைய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் வெங்காயம் ஈரமாக இருக்கும் பொழுது அதனை வெட்டுவதும் சற்று கடினமானதாக இருக்கும்.
09
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. நியூஸ்18 தமிழ்நாடு இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை.)
- FIRST PUBLISHED : January 8, 2025, 1:25 PM IST
Kitchen Hacks: இனி பயமில்லாமல் வெங்காயம் வெட்டலாம்.. ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது.. இத மட்டும் பண்ணுங்க!
சமையல் என்பது ஒரு கலை. இதற்கு அதிக பொறுமை தேவை. அதிலும் குறிப்பாக சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்குவது ஒரு பெரிய டாஸ்க் என்று பலர் சொல்லுவார்கள். இதன் காரணமாகவே சமைப்பதற்கு டிமிக்கி கொடுப்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் சமையலை நாம் அவ்வளவு காம்ப்ளிகேட் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
MORE
GALLERIES