வீடு முதல் கடை வரை.. இனி மலிவு விலையில் கிடைக்கும்!

2 weeks ago 29

Last Updated:January 06, 2025 2:49 PM IST

இந்த போர்ட்டலில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதில் நீங்கள் விரும்பிய சொத்தை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வங்கிகளின் சொத்து ஏலத்தில் நீங்கள் நேரடியாக பங்கேற்க முடியும்.

News18

மலிவான விலையில் வீடு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உங்களுக்காக அரசாங்கம் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது என்றே சொல்லலாம். அது என்னவென்றால், அரசு "பேங்க்நெட்" என்ற ஒரு புதிய போர்ட்டலை தொடங்கியுள்ளது. இதில், வங்கிகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் பறிமுதல் செய்யப்பட்டு, மலிவு விலையில் ஏலம் விடப்படும் சொத்துக்களை இந்த போர்ட்டல் மூலம் நீங்கள் வாங்கலாம்.

BAANKNET போர்ட்டலில், அனைத்து அரசு நிறுவனங்களின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வங்கிகள், அரசு நிறுவனங்கள், கடனை செலுத்தாத பட்சத்தில் அல்லது வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் இந்த தளத்தில் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒருவர் சொத்துக்களை வைத்து கடன் பெற்றிருந்தால் அதை செலுத்தாத பட்சத்தில் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அவற்றை கையகப்படுத்தி அதனை ஏலம் விட்டு, தங்கள் கடன் தொகையை பெறுகின்றனர்.

இதுபோன்ற சொத்துக்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தகவல்களை பொதுமக்களால் ஒரே நேரத்தில் பெற முடியாது. ஆகையால், பொதுமக்கள் வசதிக்காக இந்த போர்ட்டலில் மலிவு விலையில் விற்கப்படும் சொத்துக்கள் குறித்த தகவல்களை பெற முடியும். இந்த போர்ட்டலில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதில் நீங்கள் விரும்பிய சொத்தை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வங்கிகளின் சொத்து ஏலத்தில் நீங்கள் நேரடியாக பங்கேற்க முடியும்.

Also Read: தங்கத்தை போன்று இயற்கையாகவே பளபளப்பு… பெண்களை கவரும் லேப் மேட் கோல்டு நகைகள்…

அதற்கு இந்த போர்ட்டலுக்கு சென்று நீங்கள் சொத்தை வாங்க விரும்பும் நகரத்தை தேர்ந்தெடுக்கவும். இதையடுத்து நீங்கள் வாங்க விரும்பும் சொத்தின் வகையை தேர்ந்தெடுக்கவும். வணிக சொத்தா, குடியிருப்பா, வீடு அல்லது கடை என்று உங்களின் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். மேலும், வாங்க விரும்பும் சொத்தின் தொகையையும் நீங்களே தேர்வு செய்யலாம். அனைத்து விவரங்களையும் வழங்கிய பிறகு முழுமையான பட்டியல் தோன்றும். இத்துடன், தரமான புகைப்படங்களும் பதிவிடப்பட்டிருக்கும். இதை பார்த்து நீங்கள் சொத்தின் முழுமையான மதிப்பீட்டை பெற முடியும். நீங்கள் விரும்பும் சொத்து அருகில் இருந்தால் அதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு பதிவு படிவம் தோன்றும்.

அதில் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அதை பூர்த்தி செய்தால், மின் ஏல அட்டவணை தோன்றும். இதை வைத்து சொத்துக்களை வாங்க விரும்புபவர்கள் மலிவான விலையில் வாங்கி பலனடையலாம்.

First Published :

January 06, 2025 2:49 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வீடு முதல் கடை வரை.. இனி மலிவு விலையில் கிடைக்கும்.. புதிய அம்சம் அறிமுகம்.. என்ன தெரியுமா?

Read Entire Article