Last Updated:December 29, 2024 9:41 AM IST
காற்று மாசுபாட்டை சுத்திகரிக்கக் கூடிய வகையில் வீடுகளில் வளர்க்கக்கூடிய இன்டோர் பிளான்ஸ்களின் வகைகளை தெரிந்து கொள்வோமா...
இன்டோர் பிளாண்ட்ஸ்
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சுற்றுச்சூழலில் உள்ள மோசமான காற்றின் தரத்தால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நோய்கள் உருவாகும் சூழ்நிலை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் போது, நோய்களின் தாக்கம் குறைந்து ஆரோக்கியமாக வாழ முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படி, சுற்றுச்சூழலை தாண்டி நமது வீடுகளிலும் நச்சு காற்றுக்கள் இருப்பதை போக்கி ஆரோக்கியமாக வாழ, நமது வீடுகளில் இன்டோர் பிளான்ட்ஸ் வளர்ப்பதன் மூலமாக நச்சு வாயுக்களை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியேற்றி வீட்டை குளிர்ச்சியாகவும், மன அமைதியாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
எந்த மாதிரியான இன்டோர் பிளான்ட்ஸ்ளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றும் அதனுடைய நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோமா.... பொதுவாகவே கற்றாழையின் வகைகள் அதிகமாக இருந்தாலும் வீடுகளின் உள்ளே வளர்க்கக்கூடிய இண்டோர் கற்றாழைகள் (cactus) காற்றின் மாசு தரத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஏஞ்சல் ரிங் கற்றாழை, லேடி ஃபிங்கர் கற்றாழை, பரோடியா கற்றாழை, எலி வால் கற்றாழை, பீப்பாய் கற்றாழை, தேவதை கோட்டை கற்றாழை, நட்சத்திர கற்றாழை என பல்வேறு வகையான கற்றாழை செடிகளில் எதை வேண்டுமானாலும் உங்கள் வீடுகளில் வளர்க்கும் போது உங்களின் மனம் புத்துணர்ச்சி அடையும் என்றும், நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்னேக் பிளான்ட் என குறிப்பிடப்படும் பாம்பு செடியானது குறைந்த சூரிய வெளிச்சம் மற்றும் குறைந்த நீரை சார்ந்து எளிதில் உயிர்வாழும் தாவரமாகும். இது பார்ப்பதற்கு பாம்பின் தோல் வடிவத்தில் இருந்தாலும் இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் காற்று சுத்திகரிக்கப்படும். ஸ்பைடர் பிளான்ட்கள் செடிகள் அழகான, வளைந்த இலைகள் மற்றும் காற்றை நன்கு சுத்திகரிக்கும் செடிகளில் பிரபலமாக செடியாகும். இவை நேரடி சூரிய ஒளி இல்லாமல் நன்றாக வளரக்கூடியவை மற்றும் இவற்றுக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் தேவைப்படும்.
ZZ தாவரச் செடி என்பது சிறிய இன்டோர் பிளானட்டானது குறைந்த வெளிச்சத்திலும், குறைந்த நீர் மற்றும் குறைந்த பராமரிப்பிலும் வளர கூடிய தன்மை கொண்டவை. மேலும் இந்த செடி பளபளப்பான லுக் மற்றும் கரும் பச்சை இலைகளை கொண்டிருக்கும். இதனை ஓய்வறையில் வைக்கும் பொழுது நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதேபோல், சைனீஸ் எவர்கிரீன் செடி பளபளப்பான தோற்றத்தை கொண்டிருக்கும் என்றும் வெளிநாடுகளில் அதிகமாக வளர்க்கக்கூடிய செடிகளில் ஒன்றாக உள்ளது.
இதனை வளர்ப்பதன் மூலமாக வீடு குளிர்ச்சியாகவும் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும். இப்படி பலவிதமான இன்டோர் பிளான்ஸ்களை உங்கள் வீடுகளில் வளர்க்கும் பொழுது, சுற்றுச்சூழலில் இருக்கக்கூடிய தரமற்ற காற்றை விட உங்களது வீடுகளில் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் நிலவும் என்றும் இதன் மூலமாக ஓரளவிற்கான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Madurai,Madurai,Tamil Nadu
First Published :
December 29, 2024 9:41 AM IST