Last Updated:December 04, 2024 3:26 PM IST
பெற்றோராக வேண்டும் என்ற பல தம்பதிகளின் கனவை சீர்குலைப்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களில் ஒன்று ஆண்களில் ஏற்படும் குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கை.
இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் அவதிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களில் குறைவான விந்தணுக்கள் எண்ணிக்கை என்பது அதிகமாகி வருகிறது. மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாகவே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? இது குறித்த தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோராக வேண்டும் என்ற பல தம்பதிகளின் கனவை சீர்குலைப்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களில் ஒன்று ஆண்களில் ஏற்படும் குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கை. தற்போது கருமுட்டையை உறைய வைக்கும் தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது. உங்களுடைய மருத்துவரிடம் பேசி கருமுட்டைகளை உறைய வைப்பதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் செய்யலாம். ஆனால் ஒருவேளை இயற்கையான முறையில் உங்களுக்கு தாய்மை அடைய வேண்டுமென்றால் முதல் குழந்தையை பெறுவதற்கான சரியான வயது 25 மற்றும் 30 என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த கணக்கீடு தாய்மைக்கான சரியான வயதை நிர்ணயிக்காது.
குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள். அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்கள், மது அருந்துதல், புகையிலை எடுத்துக் கொள்ளுதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக குறைவான தூக்கம் பெறும் ஆண்கள் இடையே விந்தணுக்கள் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தவிர அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மூலமாகவும் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மது அருந்துவதை கைவிடுவது நல்லது. மேலும் புகையிலை பயன்படுத்துவதையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டு, வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
Also Read | உங்க செக்ஸ் வாழ்க்கை ரொம்ப போரிங்கா போகுதா..? ஸ்பைசியாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..!
சரிவிகித உணவு மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அதாவது பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகள் விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவி புரியும். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்து மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றினால் விந்தணுக்களின் தரம் மேம்படும்.
நம்முடைய வாழ்க்கையில் விந்தணு என்பது மிகவும் முக்கியமானது. அது இல்லாமல் குழந்தைகள் என்ற சந்தோஷத்தை நம்மால் பெற முடியாது. எனவே உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் சரியான நேரத்தில் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். கருத்தரிப்பதில் சிக்கல்களை அனுபவிக்கும் தம்பதிகள் சரியான நேரத்திற்கு நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதன் மூலமாகவும், தங்களுடைய பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் பாசிட்டிவான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாகவும் கூடிய விரைவில் தங்களுடைய பெற்றோராகும் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
First Published :
December 04, 2024 3:26 PM IST