விடுதலை 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி…

1 month ago 15

Last Updated:December 19, 2024 7:03 PM IST

விஜய் சேதுபது, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது.

News18

விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விஜய் சேதுபது, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை-2  திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 700 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் விடுதலை-2 படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து,விடுதலை-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க - விடுதலை பார்ட் 2 நாளை ரிலீஸ் : எவ்வளவு சென்சார் கட் விழுந்து இருக்கு தெரியுமா ?

இந்நிலையில் படக்குழுவினர் விடுதலை 2 படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. படம் வெளியாகும் நாளை காலை 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

December 19, 2024 7:03 PM IST

Read Entire Article