‘விடாமுயற்சி’ விலகல்… பொங்கலுக்கு இத்தனை படங்களா?

2 weeks ago 11

Last Updated:January 02, 2025 7:54 AM IST

Pongal release | ‘விடாமுயற்சி’ படம் வெளியாக இருந்ததால், மற்ற படங்கள் எதுவும் பொங்கல் ரேஸில் பங்கேற்கவில்லை. பாலாவின் ‘வணங்கான்’ மட்டும் ஜனவரி 10-ம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

News18

பொங்கல் ரிலீஸிலிருந்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பின்வாங்கிய நிலையில், ஏராளமான சிறிய, மீடியம் பட்ஜெட் படங்கள் திரைக்கு வர உள்ளன. புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஜன.1) ஒரே நாளில் பல்வேறு படங்களில் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், டப்பிங், ரீ- ரெக்கார்டிங், சென்சார் உள்ளிட்ட பணிகள் தாமதம் ஆனதால் படம் திட்டமிட்டப்படி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என தகவல் வெளியானது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. ‘விடாமுயற்சி’ படம் வெளியாக இருந்ததால், மற்ற படங்கள் எதுவும் பொங்கல் ரேஸில் பங்கேற்கவில்லை. பாலாவின் ‘வணங்கான்’ மட்டும் ஜனவரி 10-ம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ வெளியாகாத நிலையில், ஏராளமான சிறிய, மீடியம் பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளன. அதன்படி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ShivaRajkumar | தலைமுடி இல்லாமல் ஆளே மாறிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. புற்றுநோயிலிருந்து மீண்ட சிவராஜ்குமார்!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சுமோ’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இடம்பெற்றுள்ளது. மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும், ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிஷன் தாஸ் நடித்துள்ள ‘தருணம்’ திரைப்படம், சிபி சத்யராஜின் ‘டென் ஹவர்ஸ்’ (ten hours) ஆகிய திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாகின்றன. இதை தவிர்த்து, பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கர் - ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படங்களும் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

First Published :

January 02, 2025 7:47 AM IST

Read Entire Article