Last Updated:December 26, 2024 11:35 AM IST
Tondan Fish| பட்ஜெட் மீன்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும் தொண்டான் மீனின் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
தொண்டான் மீனின் சிறப்புகள்
மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து எழும்புகளுக்கு வலுசேர்க்கும், பட்ஜெட் மீன்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும் தொண்டான் மீனின் அரியாத மருத்துவ குணங்கள், சிறப்புகள்.
வெள்ளி நிற உடல் தோற்றத்துடன், முதுகில் நீல பச்சை நிறத்திலும், வாய் பகுதி முக்கோணம் போன்ற கூர்மையாக, கை அங்குலம் நீளத்தில் இருக்கும் மீன் தொண்டான் மீன். துடுப்புகள் இன்றி பிளவுபட்ட வால் மட்டுமே உள்ளது. இதனை வைத்து நீந்தி கொண்டு செல்லும். அதிகப்பட்சமாக 21 செ.மீ நீளம் வரை வளரும்.
இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு பசுபிக் பெருங்கடலில் வாழ்கின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் இந்த வகை மீன்கள் உணவை தேடும்பொழுது கூட்டமாக சென்று தேடும். சிறிய வகை உயிரினங்கள், மீன்களின் முட்டைகள், கடல் தாவரங்களில் படிந்திருக்கும் பாசிகள் தான் இவற்றின் உணவு. இதனால் தான் சுவையிலும் சிறந்த மீனாக உள்ளது. மீனாக மட்டுமில்லாமல், கருவாடிற்கும் சுவை சூப்பராக இருக்குமாம். கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை பட்ஜெட் விலையில் கிடைப்பதால் மீன்பிரியகளின் உணவு வரிசையில் இதுவும் உள்ளது.
மருத்துவ குணங்கள்:
இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் என்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தோல் நோய்கள் வராமல் தடுத்து தோலை பராமரிக்கவும் உதவுகிறது.
கண்பார்வை, மன அழுத்தம் உள்ளவர்கள், இதனால் ஏற்படும் முடி உதிர்தலை சரிசெய்ய வாரம் இருமுறை இந்த மீனை உட்கொண்டால் மன அழுத்தத்தை தடுத்து, முடி உதிர்வது குறைந்து நன்றாக வளரத்தொடங்கும். மீனில் குழம்பு, கிரேவி, பொறித்து, அவியல் வைத்து சாப்பிடலாம். பொறித்து சாப்பிட நன்றாக இருக்கும். கருவாட்டில் குழம்பு, பொறித்து சாப்பிடலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 26, 2024 11:35 AM IST