தேவையான EMI செலுத்துவதற்கான வருமானம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? அல்லது அவர்கள் முதலீடு செய்து அதன் மூலமாக பணத்தை சம்பாதித்து வீடு வாங்க வேண்டுமா? அது மாத வருமானம் பொருளாதார இலக்குகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமையலாம். இப்பொழுது இந்த பதிவில் இரண்டு விதமான சூழ்நிலைகளை பார்க்க இருக்கிறோம். ஒன்று ஹோம் லோனுக்கான கணக்கீடுகள், மற்றொன்று அதே நபர் அந்த பணத்தை SIP மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலமாக எவ்வளவு ரிட்டன் பெறுகிறார் என்பதை பார்க்கலாம்.
வீடு வாங்குவது என்பது ஏன் ஒரு நீண்ட கால பொறுப்பாக அமைகிறது?
வீடு வாங்கக்கூடிய பெரும்பாலான நபர்கள் நிலையான வருமானம் பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த வருமானத்தை வைத்து தங்களுடைய அனைத்து பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்து, அதே நேரத்தில் ஹோம் லோனுக்கான EMI தொகையையும் செலுத்த வேண்டும். உதாரணமாக 55 லட்ச ரூபாய்க்கு வருடத்திற்கு 9.5% வட்டியில் ஹோம் லோன் எடுப்பதாக வைத்துக் கொள்வோம்.
Also Read : SBI வங்கியில் பாதுகாப்பான முதலீடு… 180 நாட்களில் ரூ. 3 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
20 வருடங்களுக்கு லோன் எடுத்தால் அதற்கான EMI தொகை 51,267 ரூபாய். அவர் திருப்பி செலுத்தும் மொத்த தொகை 1,23,04,132 ரூபாய். இதுவே 25 வருடங்களுக்கு அவர் ஹோம் லோன் எடுத்தால் அவருடைய EMI தொகை 48,053 ரூபாயாகவும், திருப்பி செலுத்த வேண்டிய மொத்த தொகை 1,44,15,995 ரூபாய் ஆகவும் இருக்கும். 30 வருடங்களுக்கான EMI தொகை 46,247 ரூபாய் மற்றும் மொத்த தொகை 1,66,48,913 ரூபாய் ஆகும். எனவே குறைந்த தொகையை செலுத்துவதற்கு ஒருவர் குறைவான கால அளவை தேர்வு செய்ய வேண்டும் என்பது இதன் மூலமாக புரிகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு எப்படி வேலை செய்கிறது?
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் ஒரு மாதத்திற்கு நீங்கள் குறைந்த அளவிலான தொகையை முதலீடு செய்வதன் மூலமாக ஆரம்பித்து வருமானம் அதிகரிக்கும் பொழுது உங்களுடைய முதலீட்டையும் நீங்கள் அதிகரிக்கலாம். இதற்கான ரிட்டன் உங்களுக்கு வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் வழங்கப்படும். நீங்கள் எவ்வளவு நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு வேகமாக உங்கள் பணம் வளரும். உதாரணமாக 10,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் SIP முதலீட்டில் ஒரு வருடத்திற்கு 12 சதவீத ரிட்டனுக்கு 20, 25 மற்றும் 30 வருடங்களுக்கு நீங்கள் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.
20 வருடங்களில் நீங்கள் செய்த முதலீடு 24,00,000 ரூபாயாகவும், மொத்த ரிட்டன் 99,91,479 ரூபாயாகவும் இருக்கும். இதுவே 25 வருடங்களில் நீங்கள் செய்த முதலீடு 30,00,000 ரூபாயாகவும், மொத்த ரிட்டன் 1,89,76,351 ரூபாயாகவும் இருக்கும். 30 வருடங்களில் நீங்கள் செய்த முதலீடு 36,00,000 ரூபாயாகவும், மொத்த ரிட்டன் 3,52,99,138 ரூபாயாகவும் இருக்கும்.
ஹோம் லோன் கணக்கீடு
இங்கு நாம் 60 லட்சம் ரூபாய்க்கு ஹோம் லோன் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கான வட்டி ஒரு வருடத்திற்கு 12 சதவீதம் மற்றும் கால அளவு 25 வருடங்கள். ஒருவர் இந்த ஹோம் லோன் எடுப்பதற்கு 10% டவுன் பேமெண்ட் தொகையை செலுத்துவதாக கருதுவோம். அப்படி இருக்க வீட்டின் மதிப்பு 66 லட்ச ரூபாய்.
இந்த சூழ்நிலையில் ஹோம் லோனுக்கான EMI தொகை என்பது 52,422 ரூபாய். வட்டியாக மட்டும் நீங்கள் 97,26,540 ரூபாயை செலுத்த வேண்டும். நீங்கள் வாங்கிய கடனுக்கு மொத்தமாக 1,57,26,540 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும்.
SIP முதலீடு என்னவாக இருக்கும்?
இதே தொகையை SIP முதலீட்டுக்கு வைத்துக் கொள்வோம். 25 வருடங்களுக்கு உங்களுடைய மாத SIP முதலீடு என்பது 20,000 ரூபாயாக இருக்கும். இதற்கான ரிட்டனை 8%, 10% மற்றும் 12 சதவீதத்தில் கணக்கீடு செய்து கொள்ளலாம். 8% ஆண்டு ரிட்டனுக்கு 25 வருடங்களில் உங்களுடைய முதலீடு 1,91,47,331 ரூபாயாக வளர்ந்து இருக்கும். இதுவே 10% ஆண்டு ரிட்டனுக்கு 25 வருடங்களில் உங்களுடைய மொத்த ரிட்டன் தொகை 2,67,57,807 ரூபாய். இறுதியாக ஆண்டுக்கு 12 சதவீத ரிட்டனுக்கு உங்களுக்கான இறுதி ரிட்டன் 3,19,52,702 ரூபாய்.
ரியல் எஸ்டேட் துறையில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 சதவீத விலை உயர்வு என்ற கணக்கில் 66 லட்ச ரூபாய்க்கான வீடு 25 வருடங்களில் 2,20,11,307 ரூபாயாக இருக்கும். இது கடனை திருப்பி செலுத்துவதற்கான செலவில் 1,57,26,540 ரூபாயாக இருக்கும். இந்த இடத்தில் SIPல் முதலீடு செய்யும் ஒருவர் 25 வருடங்களுக்கு செலுத்தும் வாடகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் ஹோம் லோன் வாங்கியவர் பெரும் வரி பலன்களும் இங்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
First Published :
December 27, 2024 6:44 PM IST