"ரிலையன்ஸின் அர்ப்பணிப்பின் சின்னம் ஜாம்நகர்" - நீடா அம்பானி

2 weeks ago 11

Last Updated:January 03, 2025 11:01 AM IST

Nita Ambani | ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருபாய் அம்பானியின் தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளித்து முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், சுத்திகரிப்பு நிலையத்தின் உலகளாவிய தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

News18

ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையின் 25வது ஆண்டு விழா, திருபாய் அம்பானியின் கனவுகளை கௌரவிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் 25வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருபாய் அம்பானியின் தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளித்து முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், சுத்திகரிப்பு நிலையத்தின் உலகளாவிய தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன சுத்திகரிப்பு வசதிகளில் ஒன்றான ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் 25வது ஆண்டு நிறைவை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடியது. சுத்திகரிப்பு நிலையத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தை பற்றி சிந்திக்கவும், அதன் நிறுவனரான திருபாய் அம்பானிக்கு மரியாதை செலுத்தவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், சுத்திகரிப்பு நிலையத்தின் சாதனைகளை நினைவுகூருவது மட்டுமல்லாமல், திருபாய் அம்பானியின் கனவுகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

திருபாய் அம்பானிக்கு புகழாரம்

இந்த கூட்டத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான நீடா அம்பானி உரையாற்றினார். ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றும் திறனில் திருபாய் அம்பானியின் அசைக்க முடியாத நம்பிக்கையை பற்றி நீடா அம்பானி நினைவு கூர்ந்தார். இது இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் மையத்தை உருவாக்கும் திருபாயின் கனவின் வெளிப்பாடு என்றும் நீதா அம்பானி புகழாரம் சூட்டினார். மேலும், ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் நம்ப முடியாத பயணத்தை இன்று கொண்டாடுவதாகவும், திருபாய் அம்பானியை நினைவுகூருவதற்கும் கௌரவிப்பதற்கும் இது ஒரு சிறந்த தருணம் என்றும் நீடா அம்பானி தெரிவித்தார். "இந்தியாவுக்கான எரிசக்தி மையத்தை உருவாக்குவது மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கு சேவை செய்வது போன்ற அவரது கனவு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கிறது" என்றார்.

Also Read: Isha Ambani: “அவருக்கு தன் தந்தையின் கனவுகளை விட உயர்ந்தது ஏதும் இல்லை...” - உணர்ச்சிப்பூர்வமாக பேசிய இஷா அம்பானி

"ரிலையன்ஸின் ஆன்மா"

அம்பானி குடும்பத்தில் ஜாம்நகருக்கு என்றும் தனி இடம் உண்டு என்று பேசிய நீடா அம்பானி, ஜாம்நகர் என்பது ஒரு இடம் மட்டுமல்ல, அது ரிலையன்ஸின் ஆன்மா என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். மேலும், திருபாய் அம்பானியின் 92வது பிறந்தநாளில் அவர் நம் அனைவருக்கும் தனது ஆசீர்வாதங்களை வழங்குவார் என்று நம்புவதாகவும் நீடா அம்பானி கூறினார். திருபாய் அம்பானியின் சுத்திகரிப்பு நிலையத்தின் கனவை நனவாக்க முகேஷ் தனது தந்தைக்கு உதவியதாக கூறினார். அத்துடன், இந்த நிகழ்வு ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் நம்பமுடியாத பயணத்தை எடுத்துக்காட்டுகிறது. இது முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, செயல்பாட்டு சிறப்பம்சம் மற்றும் பொருளாதார மாற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பங்களிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

"ரிலையன்ஸின் அர்ப்பணிப்பின் சின்னம்"

ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் சுத்திகரிப்பதில் ஒரு முக்கிய அடையாளமாக மட்டுமல்லாமல், புதுமை மற்றும் சிறந்து விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் அர்ப்பணிப்பின் சின்னமாகவும் உள்ளதாகவும், முகேஷ் அம்பானி தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையை சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து சென்றதாகவும் குறிப்பிட்டார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இயக்குவதில் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

"எதிர்காலத்தை நோக்கி..."

செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன ஆட்டோமேஷனை செயல்பாடுகளில் ஒருங்கிணைக்கும் திட்டங்கள் உட்பட, தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், ஜாம்நகர் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் செயல்பாட்டு திறனுக்கு தயாராக உள்ளதாக நீடா அம்பானி கூறினார். இறுதியாக, ஜாம்நகரின் எதிர்காலம் மற்றும் உலகளாவிய சுத்திகரிப்புத் துறையில் புதுமை மற்றும் வெற்றியின் கலங்கரை விளக்கமாக அதன் தொடர்ச்சியான பங்கு பற்றிய பெருமை மற்றும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

First Published :

January 03, 2025 10:59 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Nita Ambani: "ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் ரிலையன்ஸ் அர்ப்பணிப்பின் சின்னம்" - உணர்ச்சிப்பூர்வமாக பேசிய நீடா அம்பானி!

Read Entire Article