யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் 18 ஆம் தேதி தொடக்கம்

2 weeks ago 20

Last Updated:January 07, 2025 11:10 PM IST

கடந்த முறையைப் போன்று இந்த முறையும் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

News18

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் 18 ஆம் தேதி மலேசியாவில் தொடங்குவதாக ஐசிசி தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல் தொடர் தென்னாப்பிரிக்காவில்  2023ஆம் ஆண்டு நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் இரண்டாவது உலகக்கோப்பை போட்டிகள் வரும் 18 ஆம் தேதி மலேசியாவில்  தொடங்குவதாக ஐசிசி தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளதுடன், அது தொடர்பான புரோமோவையும் வெளியிட்டுள்ளார்.  இந்தியா உள்ளிட்ட 16 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

சர்வதேச போட்டிகளில் விளையாட தேசிய அணிகளுக்கு தேர்வாகுவதற்கு யு19 உலகக்கோப்பை தொடர் வீராங்கனைகளுக்கு முக்கியமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க - ‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்து விட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

இன்று இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீராங்கனைகள் யு19 போட்டிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால், இந்த உலகக்கோப்பை தொடர் கவனம் பெற்றுள்ளது.


The second staging of the @ICC Women's U19 @T20WorldCup in Malaysia promises to be one of the highlights of this year's cricket calendar #U19WorldCup. pic.twitter.com/RepBmY1POK


— Jay Shah (@JayShah) January 7, 2025

கடந்த முறையைப் போன்று இந்த முறையும் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

First Published :

January 07, 2025 11:10 PM IST

Read Entire Article