Published: Tuesday, January 7, 2025, 9:52 [IST]
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்ய நாடெல்லா சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவில் மைக்ரோசாஃப்டின் விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து இருவரும் பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்ற கொள்கையை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஐடி உலகை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.
அப்படி இருக்கையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய செயல்முறைகளை AI மையமாக்க செயல்பட்டு வருகின்றன. அதோடு தங்கள் தடத்தை விரிவு படுத்தவும் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்தியாவில் தனது தடத்தை விரிவாக்கம் செய்யவுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சத்ய நாடெல்லா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அன்று தனது X பதிவில் "சத்ய நாடெல்லா! உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மைக்ரோசாஃப்டின் விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். தொழில்நுட்பம், புதுமை மற்றும் AI ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நீங்கள் விவரித்தது நன்றாக இருந்தது", என்று பதிவிட்டிருந்தார்.
சத்ய நாடெல்லா இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நாடெல்லா, இந்தியாவில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தவும், இந்தியாவில் எங்கள் செயல்பாடுகளை விரிவு படுத்தவும், அனைத்து இந்தியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் பயனளிக்கும் வகையில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வந்த நாதெல்லா, இந்தியாவில் உள்ள சாப்ட்வேர் டெவலப்பர்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். நம் நாட்டில் உள்ள டெவலப்பர்கள் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறினார்.
அதன் பின்னர் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சிக்கு உதவுவதற்காக இந்தியாவில் மைக்ரோசாஃப்டின் புதிய திறன் மேம்பாட்டு முதலீடு குறித்தும் அறிவித்தார். இந்த முதலீட்டின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் மக்களுக்கு AI பயிற்சி வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அனைத்து இந்தியர்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதில் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல், திறன் மேம்பாட்டு முதலீடுகள் மற்றும் இந்திய டெவலப்பர்களை ஆதரித்தல் ஆகியவை அடங்கும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
PM Modi Meets Microsoft CEO Satya Nadella to Discuss Technology and Innovation
Prime Minister Narendra Modi meets Microsoft CEO Satya Nadella to discuss advancements in technology, innovation, and India's digital growth opportunities.