ஷேன் நிகாம், கலையரசன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகம் ஆகும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.
ட்ரெய்லர் எப்படி? - மலையாளத்தில் ஷேன் நிகம் நடித்த ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘இஷ்க்’, ‘பூதகாலம்’, ‘ஆர்டிஎக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவை. இந்த சூழலில் ‘மெட்ராஸ்காரன்’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் ஷேன் நிகம். ட்ரெய்லர் முழுக்கவே ஆக்ஷன், குருதி தெறிக்கும் வன்முறை, ஈகோ துரத்தல்கள் என பரபரக்கிறது. படத்தின் தன்மை எப்படி இருக்கப் போகிறது என்பதை ட்ரெய்லரிலேயே யூகிக்க முடிகிறது. கலையரசனுக்கும், ஷேனுக்கு இடையிலான ஈகோ விளையாட்டுதான் மொத்தம் படமும் என்பதை யூகிக்க முடிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘காதல் சடுகுடு’ பாட்டின் ரீமிக்ஸ் வரும் இடத்தை தவிர முழு ட்ரெய்லரும் ‘டார்க்’ ஆகவே நகர்கிறது. கோபம், ஈகோ, அடிதடி, ஆக்ஷன், எமோஷன் உள்ளிட்ட அம்சங்களை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. சாம் சி.எஸ்சின் தீவிரத்தன்மை கொண்ட பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. ‘மெட்ராஸ்காரன்’ ட்ரெய்லர் வீடியோ:
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
FollowFOLLOW US
தவறவிடாதீர்!
- “எங்கள் கவனம் குடும்பங்களை நோக்கி உள்ளது” - ஓயோ நிறுவனர் விளக்கம்
- பெண்களின் பாதுகாப்பு முதல் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் வரை: ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள்
- ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது ஐகோர்ட்
- ‘இந்தியா கேட்’ பெயரை ‘பாரத் மாதா துவார்’ என மாற்றுக: பிரதமர் மோடிக்கு பாஜக கோரிக்கை