வெறும் வயிற்றில் முருங்கை இலைகளை உட்கொள்வதால், அதிலிருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களை நம் உடல் மிகவும் திறமையாக உறிஞ்சி கொள்கிறது. இந்த பழக்கம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, எனர்ஜி லெவல், செரிமானம் மற்றும் பொது ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். உங்கள் காலை வழக்கத்தில் ஃபிரெஷ்ஷான முருங்கை இலைகளை சாப்பிடும் வழக்கத்தை சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் முருங்கை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 16, 2024, 7:00 PM IST Published by
Aishwarya.s
01
எண்ணற்ற நோய்களை விரட்டும் சக்தி கொண்டது முருங்கை. ஆண்டின் எல்லா நாட்களிலும் எளிதாக கிடைக்க கூடிய முருங்கைக்காய் மற்றும் கீரையை வாரத்தில் 2 - 3 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஃபிரெஷ்ஷான முருங்கை இலைகளில் அதாவது முருங்கை கீரைகளில் வைட்டமின்ஸ், மினரல்ஸ் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஃபிரெஷ்ஷான முருங்கை இலைகளை சாப்பிடுவது, செரிமான அமைப்பில் வேறு உணவு எதுவும் இல்லாததால் நம் உடல் அதிலிருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களை மிகவும் திறம்பட உறிஞ்சுவதை உறுதி செய்கிறது.
02
வெறும் வயிற்றில் முருங்கை இலைகளை உட்கொள்வதால், அதிலிருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களை நம் உடல் மிகவும் திறமையாக உறிஞ்சி கொள்கிறது. இந்த பழக்கம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, எனர்ஜி லெவல், செரிமானம் மற்றும் பொது ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். உங்கள் காலை வழக்கத்தில் ஃபிரெஷ்ஷான முருங்கை இலைகளை சாப்பிடும் வழக்கத்தை சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் முருங்கை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
03
செரிமானத்தை மேம்படுத்துகிறது: முருங்கை கீரைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. கூடுதலாக இவற்றில் குளுக்கோசினோலேட்ஸ் மற்றும் ஐசோதியோசயனேட்ஸ் போன்ற ஆரோக்கியமான கலவைகள் உள்ளன. இவை குடலை சுத்தப்படுத்துவதோடு செரிமான அமைப்பில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
04
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: முருங்கை இலைகளை தொடர்ந்து எடுத்து கொள்வது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதுமே வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இது காய்ச்சல், சளி மற்றும் பிற தொற்றுகள் போன்ற பொதுவான நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்க முடியும்.
05
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வெறும் வயிற்றில் முருங்கை இலைகளை சாப்பிடுவது இன்ஃப்ளமேஷன் , ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் சரும எரிச்சலைக் குறைக்க உதவும். கொலாஜனின் தொகுப்பைக் கட்டுப்படுத்தும் முருங்கை இலைகளின் திறன் உறுதியான, அதிக மீள்தன்மை கொண்ட சருமத்தை உருவாக்குகிறது, இது சருமத்தில் மெல்லிய சுருக்கங்கள் மற்றும் சதை தொங்குவதை தவிர்க்க உதவுகிறது.
06
ஆற்றலை அதிகரிக்கிறது: பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட முக்கியமான மினரல்ஸ் மற்றும் வைட்டமின்ஸ் நிறைந்த முருங்கை கீரை நம் உடலில் ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதிலிருக்கும் அதிக இரும்புச்சத்தானது ரத்த ஓட்டம் மற்றும் உயிரணுக்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலம் பலவீனம் மற்றும் சோர்வை குறைக்க உதவுகிறது.
- FIRST PUBLISHED : December 16, 2024, 7:00 PM IST
செரிமானம் முதல் சரும நோய் வரை.. முருங்கை இலைகளை வெறும் வயிற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

MORE
GALLERIES