100 கிராம் பனீரில் 18 கிராம் புரதம் உள்ளது :
இந்திய பாலாடைக்கட்டி என அழைக்கப்படும் பனீர், பரவலாக விரும்பப்படும் சைவ புரத உணவாகும். அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி பாலை திரிய வைப்பதன் மூலம் பனீர் தயாரிக்கப்படுகிறது. பனீரில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சைவ உணவு உண்பவர்களுக்கும், அதிக புரதச்சத்து உள்ள உணவை விரும்புபவர்களுக்கும் பனீர் ஒரு சிறந்த தேர்வாகும்.
இதிலுள்ள மெதுவாக ஜீரணிக்கக்கூடிய கேசீன் புரதம், தசை மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
பனீரில் கொழுப்பு அதிகம் (100 கிராமுக்கு 20 கிராம்). மேலும் சுமார் 1.2 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் இதில் கால்சியம் அதிகமுள்ளது.
100 கிராம் வேகவைத்த முட்டையில் 13 கிராம் புரதம் உள்ளது
ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால் முட்டைகள் ஒரு முழுமையான புரத ஆதாரமாகக் கருதப்படுகின்றன. விலை குறைவாக இருப்பதாலும் பல வகையில் சமைக்கலாம் என்பதாலும் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன.
குறைந்த கொழுப்பு அல்லது கலோரிகள் கொண்ட லீன் புரொட்டீனை தேடுபவர்களுக்கு வேகவைத்த முட்டைகள் சிறந்த தேர்வாகும்.
Also Read | குளிர்காலத்தில் உங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்கும் 10 சூப்பர் ஃபுட்ஸ்.!
வேகவைத்த முட்டையில் சுமார் 10 கிராம் கொழுப்பு மற்றும் 1 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, செலினியம் மற்றும் கோலின் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களிலும் நிறைந்துள்ளதோடு மூளை ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன.
100 கிராம் ஆம்லெட்டில் 11 கிராம் புரதம் உள்ளது
ஆம்லெட்டில் காய்கறிகள், பாலாடைக்கட்டி அல்லது மசாலா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஒரு ஆம்லெட்டில் உள்ள புரத உள்ளடக்கம் செய்முறையைப் பொறுத்து மாறுபடும். இதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க நீங்கள் காய்கறிகள் அல்லது லீன் இறைச்சிகளை சேர்க்கலாம்.
சமையல் கொழுப்பு சேர்ப்பதன் காரணமாக, வேகவைத்த முட்டைகளுடன் ஒப்பிடும்போது ஆம்லெட்டில் சற்று அதிக கொழுப்பு உள்ளடக்கம் (சுமார் 12 கிராம்) உள்ளது. இருப்பினும், ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது.
அப்படியென்றால் பனீர் தான் வெற்றி பெற்றதா?
இல்லை, ஒரு நல்ல புரத உணவை முடிவு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள் உள்ளன.
முட்டைகள் "தரமான" புரத ஆதாரமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் உகந்த விகிதத்தில் கொண்டிருக்கின்றன. இது தசை பழுது மற்றும் தொகுப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். பனீரில் புரதம் அதிகமாக இருந்தாலும், முட்டையில் காணப்படும் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இல்லை. கேசீன் நிறைந்த பனீர் மெதுவாக ஜீரணமாகும். புரதம் மெதுவாக வெளியிடப்படுவதால், இரவு உணவிற்கும் நீண்ட கால தசை மீட்புக்கும் ஏற்றது பனீர்.
நீங்கள் கலோரி எண்ணிக்கையில் கவனமாக இருக்கிறீர்கள் என்றால், வேகவைத்த முட்டைகள் நல்ல விருப்பமாகும். பனீருடன் ஒப்பிடும்போது இவை குறைவான கலோரிகளையும் குறைந்த கொழுப்பையும் தருகின்றன.
பனீர், புரதம் நிறைந்ததாக இருக்கும் அதே வேளையில், அதிக கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக கலோரிகள் அடர்த்தியாகவும் இருப்பதால், எடை அதிகரிக்க அல்லது ஆற்றல் அளவைப் பராமரிக்க விரும்புவோருக்கு இது மிகவும் பொருத்தமானது.
First Published :
December 25, 2024 3:34 PM IST