மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.

2 weeks ago 6

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பூந்தமல்லியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது தந்தையான காமராஜ் என்பவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் தந்தை தனது அறையின் கதவை நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து திருவான்மியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

சித்ராவின் தந்தை காமராஜ், அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article