மருமகள் மாமனாரிடம் சொல்லக் கூடாத 7 விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?

2 weeks ago 11

Last Updated:January 02, 2025 12:32 PM IST

தாய் வீட்டையும் , மாமனார் வீட்டையும் ஒப்பிட்டு அவமதிப்பது நல்ல பழக்கம் இல்லை. அது உங்கள் உறவுகளை சீர்குலைக்கும்.

News18

மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான உறவு மட்டுமல்ல. மாமனார், மருமகளுக்கும் இடையிலான உறவும் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. குறிப்பாக மாமியாரை விட மாமனாரிடம் தான் மருமகள் அதிகமான பாசத்துடன் இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் நாம் செய்யும் சில தவறான விஷயங்கள் இந்த உறவை சீர்குலைக்கும்.

மாமியாரும், மருமகளும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே, மாமனாரும், மருமகளும் புரிந்துகொள்வதும், மரியாதை செய்வதும் மிகவும் முக்கியம். சில சமயங்களில் மருமகள் தன் மாமனாருடம் பேசும் சில வார்த்தைகள் உறவைக் கெடுக்கும். அந்த வகையில், மருமகள் தன் மாமனாரிடம் சொல்லக் கூடாத 7 வார்த்தைகள் என்ன என்பதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

உங்கள் சிந்தனை மிகவும் பழமையானது

உங்கள் மாமனார் உங்களிடம் எந்த விஷயத்திலும் தனது கருத்தை தெரிவித்தால், உங்கள் சிந்தனை முறை மிகவும் பழமையானது என்று மருமகள் கூறக்கூடாது. இது அவர்களின் வயது மற்றும் அனுபவத்தை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

உங்களுக்கு எதுவும் தெரியாது

மருமகள் மாமனாரிடம் உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லக்கூடாது. அவ்வாறு கூறுவது அவரது வாழ்க்கை அனுபவத்தையும், அறிவையும் மதிக்காத செயலாகும். இது அவர்களின் மனதை மிகவும் புண்படுத்துகிறது.

உங்கள் மகன் செய்யும் தவறுக்கு நீங்கள் தான் காரணம்

கணவன் செய்யும் தவறுகளுக்கு மாமனாரை குறைகூறும் மருமகள்கள் அதிகம். குறிப்பாக மருமகள் மாமனாரின் வளர்ப்பு குறித்து இதுபோன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால் அது பெரியவர்களை காயப்படுத்துகிறது.

இது என் வீடு, தலையிடாதீர்கள்

மகனும் மருமகளும் சண்டை போட்டால், கணவனின் பெற்றோர்கள் தலையிட்டு சண்டையை தடுத்து நிறுத்துவது வழக்கம். ஆனால், இது என் வீடு, நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொன்னால் சண்டை அதிகரிப்பதோடு அது பெரியவர்களை காயப்படுத்தும்.

இது சரியல்ல

சில மருமகள்கள் நேரடியாக மாமனாரிடம் "இது சரியல்ல" என்று கூறுகிறார்கள். ஆனால் மருமகள் இதை மாமனாரிடம் சொல்லக்கூடாது. அவர் செய்வது பிடிக்கவில்லை என்றால் மரியாதையாக சொல்லுங்கள்.

என் கணவரிடம் எதுவும் சொல்லாதீர்கள்

தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் மருமகள் அவர்களுக்கிடையே சென்று என் கணவரிடம் எதுவும் சொல்லாதீர்கள் என்று சொல்லக்கூடாது. முக்கியமாக அவர்களுக்கு இடையே சென்று தலையிட வேண்டாம்.

உங்கள் வீட்டை விட எங்கள் வீடு சிறந்தது

தாய் வீட்டையும் , மாமனார் வீட்டையும் ஒப்பிட்டு அவமதிப்பது நல்ல பழக்கம் இல்லை. அது உங்கள் உறவுகளை சீர்குலைக்கும். எனவே இரு குடும்பத்தாரையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

First Published :

January 02, 2025 12:32 PM IST

Read Entire Article