மம்மூட்டி - கௌதம் மேனன் படம் எப்போது ரிலீஸ்?

2 weeks ago 13

Last Updated:January 01, 2025 6:39 PM IST

News18

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் மலையாளப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஜோஷுவா இமை போல் காக்க'. இந்தப் படம் எதிர்மறை விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மலையாளத்தில் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு 'டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' (Dominic and The Ladies Purse) என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், லீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. துப்பறியும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாகியிருப்பதை டீசர் உறுதி செய்தது. இந்நிலையில் இந்தப் படம் வரும் ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வித்தியாசமான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First Published :

January 01, 2025 6:39 PM IST

Read Entire Article