MadhaGajaRaja | 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 10-ம் தேதி ரிலீசாகிறது. அந்த வரிசையில் ரிலீசுக்கு தயாராகி பல்வேறு காரணங்களால் வெளியிட முடியாமல் கிடப்பில் இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 8, 2025, 1:45 PM IST Published by
Khalilullah S
01
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 10-ம் தேதி ரிலீசாகிறது. அந்த வரிசையில் ரிலீசுக்கு தயாராகி பல்வேறு காரணங்களால் வெளியிட முடியாமல் கிடப்பில் இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.
02
துருவ நட்சத்திரம்: இந்த வரிசையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா நடித்த இந்தப் படம் 2016-ம் ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்தது. படத்தின் டிரெய்லரும் வெளியானது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளால் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகவில்லை. கடந்த வருடம் இப்படம் வெளியாகும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பும் வந்தும் வெளியாகவில்லை.
03
இடம் பொருள் ஏவல்: இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இடம் பொருள் ஏவல்’. 2014-ம் ஆண்டு உருவான இந்தப் படத்தை லிங்குசாமி தயாரித்தார். அண்மையில் கூட இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரிலீசுக்கு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் இன்னும் ரிலீசாகவில்லை.
04
பார்ட்டி: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 2020-ம் ஆண்டே ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இன்றும் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது.
05
யங் மங் சங்: அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா, லக்ஷ்மி மேனன் நடித்த படம் ‘யங் மங் சங்’. ஆர்.ஜே.பாலாஜி, தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 2018-ம் ஆண்டு உருவானது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளியாகவில்லை. காமெடி களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
06
நரகாசுரன்: நரேன் கார்த்திகேயன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘நரகாசுரன்’. இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்தார். 2018-ம் ஆண்டு உருவான இந்தப் படம் பொருளாதார சிக்கலால் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
- FIRST PUBLISHED : January 8, 2025, 1:45 PM IST
MadhaGajaRaja | ‘மதகஜராஜா’வுக்கு கிடைத்த விடியல்... இந்த படங்களுக்கும் கிடைக்குமா?
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 10-ம் தேதி ரிலீசாகிறது. அந்த வரிசையில் ரிலீசுக்கு தயாராகி பல்வேறு காரணங்களால் வெளியிட முடியாமல் கிடப்பில் இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.
MORE
GALLERIES