'மகாராஜா' தாக்கம்.. ஒரே மாதத்தில் இத்தனை கோடிகளா?

2 weeks ago 17

Last Updated:January 05, 2025 4:21 PM IST

Maharaja | ஒரு நல்ல திரைப்படத்துக்கு நாடு, மொழி என எந்த தடை கிடையாது என்பதற்கு பொருத்தமாய், சீனாவில் பட்டைய கிளப்பி வருகிறது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம்.

News18

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படம், சீனாவிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மொழிகளை கடந்து படத்தை உணர்ச்சி பெருக்கோடு சீன மக்கள் பார்த்த வீடியோக்களும் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

ஒரு நல்ல திரைப்படத்துக்கு நாடு, மொழி என எந்த தடை கிடையாது என்பதற்கு பொருத்தமாய், சீனாவில் பட்டைய கிளப்பி வருகிறது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 20 கோடி ரூபாய் என சிறிய பட்ஜெட்டில் உருவான விஜய் சேதுபதியின் இந்த 50 ஆவது படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. குறிப்பாக சீனாவில் நவம்பர் 29 இல் வெளியாகி ஒரே மாதத்தில் இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 250 கோடி ரூபாயில் உருவான 'பாகுபலி 2' படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி சீனாவில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது 'மகாராஜா'.

பொதுவாக சீனாவில் தந்தை மகள் பாசத்தை பிரதிபலிக்கும் இந்திய படங்கள் நல்ல வசூலை ஈட்டும். இதற்கு முன்பு வெளியான அமீர்கானின் 'தங்கல்' திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலும், 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படம் 750 கோடிக்கும் மேலும் வசூல் செய்தது. அதே பாணியில், 'மகாராஜா'வும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு சான்றாய், பயம், அச்சம், வேதனை, நெகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் தங்கள் கண்ணீரால் பிரதிபலித்தபடி, திரையரங்குகளில் 'மகாராஜா' படத்தை பார்த்தனர் சீன மக்கள்.

மகளுக்கு நடந்த அநியாயத்துக்கு தனது பாணியில் நீதி பெற்ற தந்தை மகாராஜா தந்த தாக்கத்தை மலர்கள் மூலம் விவரித்தனர் பார்வையாளர்கள்.

அதுமட்டுமின்றி 'மகாராஜா' படத்தை சமூக வலைதளங்களிலும் கொண்டாடி வரும் சீன மக்கள் பலரும், விஜய் சேதுபதிக்கென தனி FAN PAGEகளை தொடங்கி Die Heart ரசிகர்களாக மாறி வருகின்றனர்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 05, 2025 4:19 PM IST

Read Entire Article