Published: Wednesday, January 8, 2025, 8:59 [IST]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த பொங்கல் பண்டிகையில் பொதுமக்கள் எதிர்பார்த்து வந்த அரசின் ரொக்கம் ரூ.1000 கிடைக்காது என்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆம், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்னொரு டிவிஸ்ட்டை தமிழக அரசு கொடுத்துள்ளது.
அதுதான் பெண்களுக்கான மகளிர் உரிமை தொகை. இந்த தொகையை தமிழக அரசு பொங்கலுக்கு முன்னதாக பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தவுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக விடுமுறைகள் அதிகம் இருப்பதால், 10-ந்தேதியே ரூ.1,000 வரவு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் மாதமும் 15-ந்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் இந்த மாதம் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ந்தேதி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. 13-ந்தேதி ஒரு நாள் வேலை நாள் அதை தொடர்ந்து தொடர் விடுமுறை பிறகு ஜனவரி 20 மட்டுமே வேலை நாள் எனவே இந்த பணம் விரைவில் கிடைக்கவுள்ளது.
நீங்களும் பணக்காரர் ஆக வேண்டுமா? இதோ செல்வத்தை அதிகரிக்க உங்களுக்கான யூஸ்புல் டிப்ஸ்..!!
இதற்கிடையில், பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மொத்தம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்து விட்டது. இதற்கிடையில் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
அதிக வேலைவாய்ப்புகளை கொடுத்த மாநிலம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் டாப்.. RBI வெளியிட்ட அப்டேட்..!!
எனவேதான், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்கி விடலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த மாதம் 10-ந்தேதி அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Pongal free gift cash benefit not included but magalir urimai thogai rs 1000 will credited before pongal
Tamilnadu government free pongal gift not included 1000 rupees cash but womens will get rupees 1000 before pongal