Last Updated:January 06, 2025 1:35 PM IST
எக்ஸ்ரே முடிவுகள் அவர் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. அவர் பயந்தது போல் நிமோனியா நோயறிதலுக்குப் பதிலாக, எக்ஸ்ரே மிகவும் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது.
34 வயதான எகடெரினா பதுலினா என்ற பெண், காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகளுடன் நீண்டகாலமாக போராடி வந்தார். ஒருவேளை தனக்கு நிமோனியா காய்ச்சல் வந்துவிட்டதோ என்று கவலையில் மூழ்கினார். பல நாட்கள் அசௌகரியத்திற்குப் பிறகு, தன்னுடைய உடல்நிலை குறித்து சந்தேகத்தை தீர்க்கலாம் என்ற நம்பிக்கையில், மருத்துவமணை சென்று எக்ஸ்ரே எடுக்க முடிவு செய்தார்.
இருப்பினும், எக்ஸ்ரே முடிவுகள் அவர் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. அவர் பயந்தது போல் நிமோனியா நோயறிதலுக்குப் பதிலாக, எக்ஸ்ரே மிகவும் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது. தன்னுடைய உடலில் இப்படியொன்றா என இந்த எதிர்பாராத நோயறிதல் அவரைத் திகைப்படைய வைத்தது.
"நான் எந்த நொடியிலும் இறக்க நேரிடும் என்று அவர்கள் சொன்னார்கள்" என்று 34 வயதான எகடெரினா பதுலினா உள்ளூர் ஊடகத்திடம் கூறினார்.
உண்மையில் நடந்தது என்ன?
ரஷ்ய இன்ஸ்டாகிராம் இன்ஃபூளுயன்ஸரான இவருக்கு 27 வயதாக இருக்கும் போது, த்ரோம்போம்போலிஸம் பாதிப்பின் காரணமாக அவரது காலில் 33 குழாய்கள் பொறுத்தப்பட்டன. த்ரோம்பஸ் எனப்படும் இரத்த உறைவு நிலையான இது, உடலின் ஒரு பகுதியில் உருவாகி மற்றொரு இடத்திற்குச் சென்று இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது நரம்புகளில் (சிரை த்ரோம்போம்போலிசம்) அல்லது தமனிகளில் (தமனி த்ரோம்போம்போலிசம்) ஏற்படலாம். தோற்றத்தின் பொதுவாக இது கால்களில் தான் தோன்றும் (ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ்). பின்னர் இந்த ரத்த கட்டி வெளியேறி, நுரையீரலுக்குச் சென்றால் நுரையீரல் தக்கையடைப்புக்கு வழிவகுக்கும்.
இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கு மாறுபடும். ஆனால் வலி, வீக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவாக இருக்கும். அசையாமை, அறுவை சிகிச்சை, உடல் பருமன் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவை இதன் ஆபத்து காரணிகள் ஆகும்.
ஒரு வருடத்தில் 20 அறுவை சிகிச்சைகள்
சமீபத்தில், இவர் காய்ச்சல் மற்றும் கடுமையான குளிர்ச்சியை அனுபவித்தார். இதன் பரிசோதனையின் போது 5 முதல் 16 மில்லிமீட்டர் அளவுள்ள உலோக ஸ்பிரிங் அவரது நுரையீரலில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது இரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரலுக்குச் சென்றிருக்கலாம் என்றும் இது அரிதான ஆனால் தீவிரமான சிக்கலாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிடி ஸ்கேன் செய்த பிறகு, அவரது நுரையீரலில் 5 முதல் 16 மில்லிமீட்டர் அளவுள்ள உலோக ஸ்பிரிங் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்ததாக இன்ஸ்டாகிராமர் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த திடுக்கிடும் வெளிப்பாடு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தன்னுடைய உடலில் இப்படியொரு பொருள் இருப்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.
அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முழுமையான கண்காணிப்பு மற்றும் உடலில் உள்ள அந்நிய பொருட்கள் போன்ற சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிவதற்கான முக்கியமான தேவையை இந்த சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உடலின் உள்ளே இருக்கும் இந்த உலோகத்தின் காரணமாக தான் அவருக்கு வீக்கமும் தொற்றும் ஏற்பட்டுள்ளது. மேலும் சிக்கலைத் தீர்க்க உடனடி மருத்துவ தலையீடு தேவைப்பட்டது.
First Published :
January 06, 2025 1:35 PM IST