Calcium Deficiency | கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும், இதுமட்டுமின்றி எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற அபாயத்தை அதிகரிக்கும்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 4, 2024, 8:17 PM IST Published by
amudha
01
பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெண்கள் தினமும் உடலுக்கு தேவையான கால்சியத்தை சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக மாதவிடாய், கர்ப்பம் மற்றும் மெனோபஸ் காலத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படும்.
02
கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும், இதுமட்டுமின்றி எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற அபாயத்தை அதிகரிக்கும். மேலும், தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். எனவே சீரான உணவு மற்றும் சப்ளிமென்ட்ஸ் மூலம் போதுமான கால்சியத்தை தினமும் எடுத்துக் கொள்வது, பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது.
03
ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயத்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு கால்சியம் தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும். குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பல் கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.
04
மாதவிடாய் முன் தசைப் பிடிப்புகள்: மாதவிடாய்க்கு முந்தைய தசைப் பிடிப்புகள் பெண்களின் குறைந்த கால்சியம் அளவைக் குறிக்கும் முக்கியமான எச்சரிக்கை ஆகும். கால்சியம் ஆனது கருப்பை தசைகளை தளர்த்த உதவுகிறது. பிடிப்பின் தீவிரத்தை குறைக்கிறது. எனவே தசைப்பிடிப்புகளை அனுபவிக்கும் பெண்கள் தங்கள் கால்சியம் அளவை அதிகரிப்பதன் மூலம் பயனடையலாம். ஏனெனில் கால்சியம் குறைபாடு மாதவிடாய் காலத்தில் அசௌகரியம் மற்றும் வலியை அதிகரிக்கலாம்.
05
சோர்வு: தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனமாக உணர்வது பெண்களின் குறைந்த கால்சியம் அளவைக் குறிக்கும் அறிகுறியாகும். ஆற்றல் உற்பத்திக்கும், நரம்பு செயல்பாட்டிற்கும் கால்சியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே பெண்களுக்கு கால்சியம் அளவு குறைவாக இருக்கும்போது, தொடர்ச்சியான சோர்வு, சோம்பல் மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
06
பல் வலி அல்லது பல் பிரச்சனைகள்: பெண்களின் கால்சியம் அளவு குறைவாக இருப்பதற்கான பொதுவான அறிகுறியாவது பல் வலி மற்றும் பல் பிரச்சனைகள் ஆகும். வலுவான பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிக்க கால்சியம் அவசியமாகும். உடலில் கால்சியம் இல்லாததால், பற்கள் பலவீனமடைந்து உடைந்துவிடும். அதுமட்டுமின்றி, பற்களில் வலி, கூச்ச உணர்வு, பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களின் ஆபத்துக்கும் வழிவகுக்கும்.
07
நகங்கள் மற்றும் முடி உடைதல்: நகங்கள் மற்றும் முடி உடைதல் ஆகியவை கால்சியம் குறைபாட்டைக் குறிக்கும் முக்கியமான அறிகுறியாகும். ஆரோக்கியமான மயிர்க்கால்கள் மற்றும் நக வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம். உடலில் கால்சியம் இல்லாததால், மயிர்க்கால்கள் வலுவிழந்து முடி உடைதல் மற்றும் நகங்கள் உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
08
மனநிலை மாற்றங்கள்: மனநிலை மாற்றங்கள் உடலில் கால்சியம் குறைவாக இருப்பதைக் குறிக்கும் அறிகுறியாகும். உடலில் கால்சியம் இல்லாததால், நியூரோட்ரான்ஸ்மீட்டர்களின் செயல்பாட்டை பாதித்து பதற்றம், மனச்சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்கும். எனவே மன ஆரோக்கியத்திற்கு கால்சியம் அளவை பராமரிப்பது அவசியமாகும்.
- FIRST PUBLISHED : December 4, 2024, 8:17 PM IST
பெண்களின் கால்சியம் குறைபாட்டை குறிக்கும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.. பெண்களே உஷார்..!
பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெண்கள் தினமும் உடலுக்கு தேவையான கால்சியத்தை சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக மாதவிடாய், கர்ப்பம் மற்றும் மெனோபஸ் காலத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படும்.
MORE
GALLERIES