பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோவிற்கு போட்டி வைத்த மாணவி.. யார் வின்னர் தெரியுமா?

2 weeks ago 16

Updated: Tuesday, January 7, 2025, 21:44 [IST]

இன்றெல்லாம் ஆன்லைன் டெலிவரி தளங்கள் அதிகரித்துவிட்டன. மக்கள் பெரும்பாலும் வெளியில் சென்று பொருட்களை வாங்குவதை விட வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து பெறுகின்றனர். சில தளங்கள் பிரத்தியேகமாக உணவுகளை மட்டும் டெலிவரி செய்கிறது. சில தளங்கள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை டெலிவரி செய்கிறது. அப்படி இருக்கையில் மக்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு தளத்தை தேர்வு செய்து ஆர்டர் செய்கின்றனர்.

பொதுவாக வெவ்வேறு தளங்களும் தாங்கள் நிர்ணயித்த நேரத்தை பொறுத்து பொருட்களை டெலிவரி செய்யும். எனவே எந்த தளம் விரைவாக டெலிவரி செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியுள்ளார். ஹைதராபாத்தில் 3 முன்னணி விரைவு வர்த்தக தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து எந்த தளத்திலிருந்து விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது என்பதையும் பகிர்ந்துள்ளார்.

 பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோவிற்கு போட்டி வைத்த மாணவி.. யார் வின்னர் தெரியுமா?

சினேகா என்ற பெண் இதுபோன்ற வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தி முடிவுகளை தனது X பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவருடைய போஸ்டுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்கள் வந்துள்ளது.

போட்டியைத் தொடங்க சினேகா பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ ஆகியவற்றில் ஆர்டர் செய்தார். 13 நிறுவனங்களில் 2 ப்ரோட்டீன் பார்களின் ஆர்டர் டெலிவரி செய்யப்படும் என்று பிளிங்கிட் அப்ளிகேஷனில் கூறப்பட்டிருந்தது. 21 நிமிடங்களில் பால் பாக்கெட் டெலிவரி செய்யப்படும் என்று ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் அப்ளிகேஷனில் கூறப்பட்டிருந்தது.

அதே நேரம் செப்டோபில் 8 நிமிடங்களில் பன்னீர் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சோதனையை சினேகா இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வளாகத்தில் நடத்தியுள்ளார். இதற்காக இவர் அனைத்து விரைவு வர்த்தக தளங்களின் அப்ளிகேஷன்களிலும் ஆர்டர் செய்ததாகவும், யார் முதலில் வருகிறார்கள் என்று பார்க்கலாம் என்றும் தனது X பதிவில் போஸ்ட் செய்திருந்தார்.

முடிவுகள்: சினேகா நடத்திய போட்டியில் பிளிங்கிட் தான் வெற்றி பெற்றது. அதோடு சினேகா ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். பிளிங்கிட் முதலில் வந்து வெற்றி பெற்றதற்காக புரோட்டீன் பார்களை வந்த டெலிவரி பார்ட்னருக்கே அவர் பரிசாக வழங்கினார். அதோடு பிளிங்கிட் டெலிவரி செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

 பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோவிற்கு போட்டி வைத்த மாணவி.. யார் வின்னர் தெரியுமா?

நிறுவனத்தின் சொந்த மதிப்பீட்டை விட இது 2 நிமிடங்கள் மட்டுமே அதிகம் என்றும் கூறியிருந்தார். அதேபோல 20 நிமிடங்களில் டெலிவரி செய்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் இரண்டாவது இடத்தை பிடித்தது. இறுதியாக 8 நிமிடங்களில் டெலிவரி வழங்குவதாக உறுதி அளித்த செப்டோ கடைசியாக வந்தது.

செப்டோ ஆர்டரை வழங்க 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாகவும் சினேகா தெரிவித்திருந்தார். தனது வீடியோவில் சினேகா செப்டோ டெலிவரி பார்ட்னரிடம் பேசுவதையும் காண முடிகிறது. இவருடைய இந்த போஸ்ட் 70,000-த்திற்கும் அதிகமான வியூஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hyderabad Student Tests Blinkit, Swiggy, and Zepto for Fastest Delivery. Find Out Who Won!

An ISB student compares delivery speeds of Blinkit, Swiggy, and Zepto in a fun experiment. Discover which service came out on top!

Read Entire Article