Last Updated:January 10, 2025 6:59 PM IST
இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமையாக வருவதால், தேதி குறித்து சில சந்தேகங்கள்.
மத்திய பட்ஜெட் 2025க்கான பணிகள் துவங்கியுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை தலைவர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடியும் முன்னணி பொருளாதார நிபுணர்களை சந்தித்தார். பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் முதல் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் வரை அனைவரது வாழ்விலும், மத்திய பட்ஜெட் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவின் மிக முக்கியமான நிதி நிகழ்வான மத்திய பட்ஜெட், அரசாங்கக் கொள்கைகள், வரி விகிதங்கள் மற்றும் பிற அத்தியாவசிய நலத் திட்டங்களுக்கான திட்டத்தை வகுக்கும்.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியத்தைக் கொண்டு, பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும். மத்திய பட்ஜெட்டின் நேரம் குறித்து முறையான அறிவிப்பு இல்லை என்றாலும், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமையாக வருவதால், தேதி குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. இருந்தபோதிலும், மத்திய பட்ஜெட் சனிக்கிழமையன்று தாக்கல் செய்வது கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று காலை 11:00 மணிக்கு, வழக்கமான நேரப்படி சீதாராமன் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு முழுமையான பட்ஜெட்டுகள் மற்றும் இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளுடன், இது அவரது எட்டாவது மத்திய பட்ஜெட்டாகும்.
பிப்ரவரி 1, சனிக்கிழமையன்று மத்திய பட்ஜெட் தாக்கல் அன்று பங்குச் சந்தை திறந்திருக்கும். பிப்ரவரி 1 ஆம் தேதி, தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை இரண்டும் காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை வணிகத்திற்காக திறந்திருக்கும்.
First Published :
January 10, 2025 6:59 PM IST