கடந்த 2019ஆம் ஆண்டு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிணையின்றி கொடுக்கப்படும் கடனுக்கான வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 1, 2025, 11:51 AM IST Published by
Raj Kumar
01
விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிணையின்றி கொடுக்கப்படும் விவசாயக் கடனுக்கான வரம்பை உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு இன்று (ஜனவரி 1, 2025) முதல் அமலாகிறது.
02
கடந்த 2019ஆம் ஆண்டு, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிணையின்றி கொடுக்கப்படும் கடனுக்கான வரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
03
தற்போது இந்த கடன் வரம்பை மேலும் அதிகரித்திருப்பதன் மூலம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
04
டிசம்பர் 2024க்கான இருமாத நாணயக் கொள்கை அறிக்கையை அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "பிணையில்லா விவசாயக் கடனுக்கான வரம்பு கடைசியாக 2019 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. விவசாய உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிணையில்லா விவசாயக் கடனுக்கான வரம்பை ரூ. 1.6 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை மேலும் மேம்படுத்தும்," என்று தெரிவித்தார்.
05
இந்த அறிவிப்பு, விவசாயிகளின் நிதிச் சுமையை குறைக்கும் என்றும், நவீன விவசாய முறைகளை பின்பற்ற ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிறு விவசாயிகள் இந்த திட்டத்தால் அதிக பலன் அடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
- FIRST PUBLISHED : January 1, 2025, 11:25 AM IST
Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிணையின்றி கொடுக்கப்படும் விவசாயக் கடனுக்கான வரம்பை உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு இன்று (ஜனவரி 1, 2025) முதல் அமலாகிறது.
MORE
GALLERIES