பா.விஜய் இயக்கத்தில் ஜீவா.. ‘அகத்தியா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

3 weeks ago 11

Last Updated:December 25, 2024 12:41 PM IST

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக ஜனவரி 31, 2025 அன்று வெளியாகவுள்ளது.

News18

பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள திரைப்படம் 'அகத்தியா'. இதன் டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. "ஏஞ்சல்ஸ் vs டெவில்" என்ற கதைக்கருவை மையப்படுத்தி ஹாரர் திரில்லர் பாணியில் படம் உருவாக்கியுள்ளது. நாயகனாக ஜீவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக ஜனவரி 31, 2025 அன்று வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படம் குறித்து கூறுகையில், "ஹாரர் த்ரில்லர் ஜானர் நாடு முழுவதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, 'அகத்தியா' மூலம் பார்வையாளர்களின் அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். 'அகத்தியா' கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

December 25, 2024 12:40 PM IST

Read Entire Article