பாராசிட்டமால் மாத்திரையால் இத்தனை பக்கவிளைவுகளா...?

1 month ago 9

Last Updated:December 16, 2024 7:14 PM IST

Paracetamol pills | பாராசிட்டமால் என்பது வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைப்பதற்காகவும் பொதுவாக பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

News18

பாராசிட்டமால் என்பது தற்போது பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்தாக உள்ளது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று பாராசிட்டமால் பயன்பாடு குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளது. நாட்டிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஒரு புதிய ஆராய்ச்சியில் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதால் அவர்களுக்கு இரைப்பை குடல், இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி பாராசிட்டமால் என்பது பல சிகிச்சை வழிமுறைகளின்படி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க நீண்ட காலமாக பரிந்துரை செய்யப்பட்டு வரும் ஒரு மாத்திரையாகும். அதிலும் குறிப்பாக இது மருந்து தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதற்கான அதிக அபாயத்தில் உள்ள முதியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இதனால் இது சம்பந்தமான ஆய்வில் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு பெற்றனர். சராசரி வயது 75ஆக கருதப்பட்டது. இந்த ஆய்வின்போது, 2 முதல் 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக பாராசிட்டமால் பிரிஸ்கிரைப் செய்யப்பட்டு வந்த 1,80,483 நபர்களின் மருத்துவ பதிவேடுகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.

எனினும் நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக பாராசிட்டமால் மாத்திரை பயன்படுத்தியது பெப்டிக் அல்சர், இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்களுடன் தொடர்புடையதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாராசிட்டமால் என்பது வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைப்பதற்காகவும் பொதுவாக பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதன் பயன்பாடு அதிலும் குறிப்பாக முதியவர்களில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படக்கூடிய மற்றொரு முக்கியமான அபாயம் கல்லீரல் செயல்பாட்டில் பாராசிட்டமால் மாத்திரை ஏற்படுத்தும் தாக்கம். அதிக அளவிலோ அல்லது நீண்ட நாட்களாகவோ பாராசிட்டமால் சாப்பிடுவது கல்லீரலில் நச்சுக்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்து, அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம்.

இதையும் படிக்க: ஆப்பிள் அல்லது கொய்யா.. இரண்டில் எது ஆரோக்கியம் நிறைந்தது..?

இது குறிப்பாக ஏற்கனவே வயது அல்லது வேறு சில பிரச்சனைகளின் காரணமாக கல்லீரல் செயல்பாடு மோசமாக இருக்கும் நபர்களுக்கு இன்னும் தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது காய்ச்சல், தலைவலி, வயிறு வலி என்று எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக பாராசிட்டமால் மாத்திரை பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது.

இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறோம். பாராசிட்டமால் மட்டுமின்றி எந்த ஒரு உணவையோ அல்லது மருந்தையோ அளவாக எடுத்துக் கொள்ளும்போது மட்டுமே, அதன் மூலமாக பயனடைய முடியும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

First Published :

December 16, 2024 7:14 PM IST

Read Entire Article