பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது தெரியுமா ?

3 weeks ago 19

பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களின் காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா... வாங்க பார்க்கலாம்.

01

பழங்கள்

மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பழங்களில், குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது எதற்காக என நீங்கள் நினைத்தது உண்டா? பளபளப்பாக இருக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை நம்மில் பலரும் வாங்கி செல்வார்கள். ஆனால், உண்மையில் எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

02

பழங்கள்

பழங்களில் ஒட்டப்படும் இந்த ஸ்டிக்கர் உண்மையில், விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது கிடையாது என்றால் நம்ப முடிகிறதா? இது ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை பொருத்து, இந்த பழங்கள், இயற்கை முறையில் விளைந்ததா, பூச்சுக்கொல்லி மருந்துகளால் பயிரிடப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? என்பதை கண்டறியலாம்.

03

பழங்கள்

ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும், 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, 4126, 4839 போன்ற எண்கள் ஆப்பிளில் இருந்தால் அவை, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டிருக்கும். இந்த வரிசை எண்கள் கொண்ட பழங்கள் விளையும் போது, நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க பூச்சுக்கொல்லி அதிகம் பயன்படுத்திருப்பார்கள். இதனால், பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்

04

பழங்கள்

சந்தையில் கிடைக்கும் அனைத்து பழங்களும் இயற்கையானவை கிடையாது. சில பழங்கள், மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், அவை மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாகவும் இருக்கும். 5 இலக்கு எண்களை கொண்டு, 8ம் எண்ணில் தொடங்கும் எண் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. உதரணத்திற்கு 84569, 81742 போன்ற வரிசையை கொண்டிருக்கும்.

05

பழங்கள்

9 என தொடங்கும் எண்களுடன் இருக்கும் ஆப்பிள்கள் இயற்கை முறையில் விளைந்தவையாக இருக்கும். பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லியோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படாமல் இருக்கும். இந்நிலையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள் வாங்கும் போது, கவனமாக வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

  • FIRST PUBLISHED : December 31, 2024, 10:49 AM IST
  •  மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பழங்களில், குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது எதற்காக என நீங்கள் நினைத்தது உண்டா? பளபளப்பாக இருக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை நம்மில் பலரும் வாங்கி செல்வார்கள். ஆனால், உண்மையில் எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

    பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது தெரியுமா ? இது தெரிஞ்சா பழமே வாங்கமாட்டீங்க..!!

    மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பழங்களில், குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது எதற்காக என நீங்கள் நினைத்தது உண்டா? பளபளப்பாக இருக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை நம்மில் பலரும் வாங்கி செல்வார்கள். ஆனால், உண்மையில் எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

    MORE
    GALLERIES

Read Entire Article