Teeth care | பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்கவும், சுத்தமான மற்றும் வெண்மையான பற்களைப் பெறவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 29, 2024, 9:38 AM IST Published by
amudha
01
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான பற்கள் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். வெண்மையான பற்கள் நம்பிக்கையுடன் செயல்பட உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
02
பல் ஆரோக்கியத்திற்கு தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். முக்கியமாக பற்களை துலக்கும்போது மிகவும் கடினமாக ஸ்க்ரப் செய்யாமல் மெதுவாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் கடினமாக துலக்குவது பற் சிப்பி மற்றும் ஈறுகளை சேதப்படுத்தும். பல் துலக்கிய பிறகு, எச்சத்தை அகற்ற உங்கள் வாயை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
03
அதேபோல் சிலர் பல் துலக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி செய்வது பற்கள் பலவீனமாக வழிவகுக்கும். எனவே, குறைந்தது 2 முதல் 5 நிமிடத்திற்குள் பல் துலக்க வேண்டும். சரி இப்போது பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்கவும் சுத்தமான மற்றும் வெண்மையான பற்களைப் பெறவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
04
வேப்ப இலை: வேப்ப இலைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எனவே, இதை மென்று சாப்பிட்டு வருவது பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நீங்கி வெண்மையான பற்களை பெற உதவும்.
05
மஞ்சள்: தினமும் மஞ்சளைக் கொண்டு பல் துலக்குவது, பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்கி, பற்களை வெண்மையாக்கும். ஏனெனில், மஞ்சளில் உள்ள குர்குமின் பற்களை வெண்மையாக்க உதவுகிறது. பற்களை வெண்மையாக்க ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை பேஸ்ட்டில் கலந்து பல் துலக்க வேண்டும்.
06
உப்பு: உப்பு பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்கி வெண்மையாக்க உதவுகிறது. இதற்கு பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கினால் மஞ்சள் நிறம் நீங்கி வெண்மை நிறம் கிடைக்கும். சுமார் 1 முதல் 2 நிமிடங்கள் வரை உப்புடன் பல் துலக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் பற்களுக்கு நிறம் கிடைக்கும்.
07
துளசி: பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க துளசியும் உதவுகிறது. இதற்கு சில துளசி இலைகளை வெயிலில் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்தப் பொடியைக் கொண்டு பல் துலக்க வேண்டும்.
08
மா இலை: பழுத்த மா இலைகளை ஒரு பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்தப் பேஸ்ட்டை ஒரு டூத் பிரஷில் தடவி பல் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீங்கி, வெண்மையான பற்களை பெற உதவும்.
09
ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு பழத்தோலை கொண்டு பல் துலக்கினால், உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி பற்களை வெண்மையாக உதவும். (பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
- FIRST PUBLISHED : December 29, 2024, 9:38 AM IST
பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? - இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க!
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான பற்கள் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். வெண்மையான பற்கள் நம்பிக்கையுடன் செயல்பட உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
MORE
GALLERIES