Last Updated:January 03, 2025 7:04 AM IST
Game Changer | அரசியல்வாதியான எஸ்.ஜே.சூர்யாவும், அரசு அதிகாரியான ராம் சரணுக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் படமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘இந்தியன் 2’ தோல்வியிலிருந்து ஷங்கர் மீள்வாரா? என்பதை விரைவில் தெரியவரும்.
‘இந்தியன் 2’ படத்துக்கும் பிறகு இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதையை படமாக்கியுள்ளார் ஷங்கர். கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
தில் ராஜு தயாரித்துள்ளார். படம் வரும் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் வாசிக்க: திருமணமாகி 3 வாரங்கள் ஆகியும் மஞ்சள் கயிற்றை கழற்றாத கீர்த்தி சுரேஷ்… அதற்கு அவரே சொன்ன பதில்…
மீண்டும் அரசு அதிகாரம், ஊழல், லஞ்சம் ஆகிய கான்செப்டுகளை ஷங்கர் தொட்டிருப்பதாக டிரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அரசியல்வாதியான எஸ்.ஜே.சூர்யாவும், அரசு அதிகாரியான ராம் சரணுக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் படமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.
பாடல்களில் ஷங்கரின் அதே பிரமாண்டம் இருப்பதை உணர முடிகிறது. காதல், காமெடி காட்சிகள் புதிதாக இருப்பது போல தெரியவில்லை. தமன் இசை கவனிக்க வைக்கிறது. ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் இந்த டிரெய்லர் மூலம் ஷங்கர், ‘இந்தியன் 2’ தோல்வியிலிருந்து வெளியே வருவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
First Published :
January 03, 2025 7:04 AM IST