பட்ஜெட் 2025: தொழில்துறைக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன? இந்த முறையாவது கலால் வரி குறையுமா?

2 weeks ago 14

Published: Tuesday, January 7, 2025, 11:35 [IST]

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நாட்டின் வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதற்காக தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டை தயாரிக்கும் போது அரசு பல்வேறு துறை சார்ந்த தொழிலதிபர்கள், நிபுணர்கள், விவசாயிகள், பொதுமக்கள், பங்குதாரர்கள் என அனைத்து தரப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டு தெரிந்து கொள்ளும் நோக்கில் ஆலோசனை கூட்டங்களை நடத்தும்.

நிதியமைச்சகம் இதுவரையில் 9 சுற்றுகளாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த கூட்டங்களில் பல்வேறு துறை சார்ந்த நபர்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வரிச் சலுகைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைத்துள்ளனர்.

 தொழில்துறைக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன? இந்த முறையாவது கலால் வரி குறையுமா?


2026-ஆம் ஆண்டுக்கான யூனியன் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொருளாதார வல்லுநர்கள், வணிகங்களில் ஈடுபடுபவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பங்குதாரர்கள் போன்றோர் இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதலீடு, பணவீக்கம், உள்கட்டமைப்பு தொடர்பான விஷயங்களை எளிதாக்கும் நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அதோடு பொருளாதார நிபுணர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக உற்பத்தி துறைகளுக்கு சிறப்பான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. உணவுப் பணவீக்கத்தை குறைப்பதற்கு உள்ளூர் வியாபாரிகளுக்கு கோல்ட் செயின் ஸ்டோரேஜை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உதாரணமாக சில பொருட்களுக்கு குறைந்த வெப்பநிலை தேவை. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எப்பொழுதும் குளிர்பதனை பெட்டிகளில் வைத்திருப்பது அவசியம்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வு கூட்டங்களில் பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதுவரையில் பங்கேற்றுள்ளனர்.

நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வு கூட்டங்களில் பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதுவரையில் பங்கேற்றுள்ளனர். தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் வரி வரிவிலக்குகளை அதிகரிக்கவும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் கூறியுள்ளனர். இந்திய தொழில் கூட்டமைப்பு ஆண்டுக்கு 20 லட்சம் வரை வருமானம் ஈடும் தனி நபர்களுக்கு வரி விலக்குகள் மற்றும் நுகர்வோர் வணிகங்கள் மீதான நிதி சுமையை குறைக்கவும், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கவும் முன்மொழிந்துள்ளது.

கடந்த பட்ஜெட்டிலும் இதே கோரிக்கை எழுந்தது. அதன்படி விவசாயத் துறையினர் பிரதான் மந்திரி கிசான் சம்மதி யோஜனா திட்டத்தின் நிதி உதவி தொகையை இரட்டிப்பாக்கி 12,000 ரூபாயாக வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்ற விவசாய மருந்துப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Ministry Concludes Pre-Budget Talks with Focus on Jobs, Growth, and Demand

The Finance Ministry concludes pre-Budget discussions with a focus on jobs, economic growth, and boosting demand to shape India's financial roadmap.

Read Entire Article