பட்ஜெட் 2025: ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு.. இந்த பட்ஜெட்டில் பலன் கிடைக்குமா?

2 weeks ago 12

Published: Wednesday, January 8, 2025, 20:46 [IST]

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) என்ற பெயரில் நாட்டில் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த உதவி தொகையை இரட்டிப்பாக்ககோரி தற்போது பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் PM கிசான் திட்டத்தின் நிதி உதவி இரட்டிப்பாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

எனவே இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுவதை 12,000 ரூபாயாக மாற்றியமைத்து வழங்குமாறு நாடாளுமன்ற குழு தலைவர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான குழு மோடி அரசிடம் பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் தவணை தொகை 3 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2000 என்ற கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.

 ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு.. இந்த பட்ஜெட்டில் பலன் கிடைக்குமா?

மோடி அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தை தொடங்கியதன் நோக்கம் விவசாயிகள் அறுவடை நேரத்தில் உரங்கள் மற்றும் வாங்குவதற்கு நிதி உதவி வழங்குவதாகும். இதன் மூலம் விவசாயிகள் யாரையும் சார்ந்து இருக்காமல் தங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்ளலாம். இந்நிலையில் இந்தத் திட்டத்தின் நிதியுதவி தொகையை இரட்டிப்பாக்கி வழங்குமாறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் விடுத்துள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 முதல் 2026-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் போது பொருளாதார ரீதியாக நாட்டிற்கு தேவைப்படும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஒரு வேலை நிதியமைச்சர் நாடாளுமன்ற குழுவின் கோரிக்கையை ஏற்று PM கிசான் திட்டத்தின் நிதியை அதிகரிக்கலாம். அப்படி உயர்த்தப்பட்டால் தற்போது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.சி இந்த தொகை 4000 ரூபாயாக வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தத் திட்டம் முதன்முதலாக பியூஸ் கோயல் நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சிறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது குறித்து முன்பே பார்த்தோம். இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரையில் 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 19-வது தவணை எப்போது என்று எதிர்பார்த்து விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Kisan Scheme: Is the Payout Set to Increase to 12,000 in the Upcoming Budget? Details Inside!

Find out whether the PM Kisan scheme payout will increase to Rs.12,000 in the upcoming budget. Get the latest updates and details here.

Read Entire Article