நெய் மணக்க மணக்க வெண் பொங்கல் செய்யலாமா.. இதோ ரெசிபி..!

2 weeks ago 13

Last Updated:January 04, 2025 3:37 PM IST

வெண் பொங்கல் என்பது தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான சமச்சீரான சத்துகள் நிறைந்த இந்த காலை உணவானது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது 'கருவேப்பிலை, மிளகு வெண் பொங்கல்' ரெசிபி தான். இந்த கறிவேப்பிலை, மிளகு வெண் பொங்கலை நீங்கள் தேங்காய் சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

News18

தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி – 2 கப்
  • பாசி பருப்பு – 3/4 கப்
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • நெய் - 4 டீஸ்பூன்
  • சீரகம் 3 டீஸ்பூன்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • பெருங்காய தூள் – 4 சிட்டிகை
  • முந்திரி பருப்பு - தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் தேவையான அளவு பச்சரிசியை எடுத்து நன்றாக அலசி 20 நிமிடங்களுக்கு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 6 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சேர்த்து கொள்ளவும். பிறகு அதில் 2 டீஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 40 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

Also Read: பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை - தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வலுக்கும் கோரிக்கை!

பொங்கல் வெந்தவுடன் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் மிளகு மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை சேர்த்துக்கொள்ளவும். அடுத்ததாக அதனுடன் சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அனைத்தையும் நன்கு பொன்னிறமாக வறுத்தவுடன் இறுதியாக கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை நன்கு பொறிந்ததும் அவற்றை அப்படியே பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான கருவேப்பிலை மிளகு பொங்கல் பரிமாற தயார்.

First Published :

January 04, 2025 3:37 PM IST

தமிழ் செய்திகள்/லைஃப்ஸ்டைல்/

Ven Pongal Recipe | இன்னும் சில நாட்களில் வருகிறது பொங்கல்.. நெய் மணக்க மணக்க வெண் பொங்கல் செய்யலாமா.. இதோ ரெசிபி..!

Read Entire Article