நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

1 week ago 27

Last Updated:January 08, 2025 4:11 PM IST

Ghee Tea | நெய்யில் செய்யப்பட்ட பல உணவுகளை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் நெய்யில் தயாரிக்கப்படும் காபி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏனெனில் நெய்யில் இருந்து தயாரிக்கப்படும் காபி உடல் எடையை குறைப்பதாக சொல்லப்படுகிறது.

News18

நெய்யில் செய்யப்பட்ட பல உணவுகளை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் நெய்யில் தயாரிக்கப்படும் காபி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏனெனில் நெய்யில் இருந்து தயாரிக்கப்படும் காபி உடல் எடையை குறைப்பதாக சொல்லப்படுகிறது.

நெய் காபியுடன், நெய் டீ குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். காலையில் நெய் டீ குடிப்பது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். நெய்யில் இருக்கும் பியூட்ரிக் ஆசிட், ட்ரைகிளிசரைடுகள் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் மற்றும் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும். நெய் டீ ஆனது குடல் ஆரோக்கியத்திற்கும், மாதவிடாயின் போது நிவாரணம் அளிக்கவும் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறவும் இது ஒரு சூப்பர் ஃபுட்டாக செயல்படுகிறது. நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்டமினாவை அதிகரிக்கிறது

நெய் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும் நல்ல கொழுப்பு ஆகும். காலையில் நெய் டீ குடிப்பது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். நெய்யின் கொழுப்பு உடலால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. மேலும் இது தசைகள் மற்றும் மூளைக்கு ஆற்றலை வழங்குகிறது. தினமும் வெறும் வயிற்றில் டீயில் நெய் கலந்து குடித்து வந்தால், டீ அமிர்தமாக மாறும்.

குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது

நெய்யில் காணப்படும் ப்யூட்ரேட் ஆனது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே டீ உடன் நெய் கலந்து குடித்து வந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். இதுதவிர நெய் டீ குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையையும் சரி செய்கிறது. மேலும், நெய் உடன் பால் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.

எடை குறைப்பை ஊக்குவிக்கிறது

தினமும் டீ உடன் நெய் கலந்து குடிப்பது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் நெய் டீ ஆனது பசியைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் நெய் டீ குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்

நெய்யில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் காலங்களில் வலியைக் குறைக்க உதவுகிறது. எனவே உங்கள் டீ அல்லது உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்ப்பது மாதவிடாய் வலியிலிருந்து பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும் மற்றும் சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளை சரிசெய்யும்.

மன நிலையை மேம்படுத்துகிறது

நெய்யில் உள்ள ஃபாட்டி ஆசிட்கள், மூளை செல்களை ஊக்குவிப்பதன் மூலம் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நிலையை மேம்படுத்துகிறது. இதனால் கவனம் சிதறடிக்கப்படாது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

First Published :

January 08, 2025 4:11 PM IST

Read Entire Article