நீரிழிவு நோயாளிகளுக்கான டயாபடீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் : முழு விவரம் இதோ!

1 month ago 16

Last Updated:December 03, 2024 10:17 AM IST

Diabetes Health Insurance | உங்களுடைய குடும்பம் அல்லது நட்பு வட்டாரத்தில் யாருக்காவது டயாபடீஸ் இருக்கிறதா?. இந்த சைலன்ட் கில்லரான டயாபடீஸ் இன்று பல வீடுகளுக்குள் புகுந்து விட்டது. கிட்டத்தட்ட 100 மில்லியன் இந்தியர்கள் டயாபடீஸ் பிரச்சனையுடன் வாழ்வதாக கூறப்படுகிறது.

News18

நீரிழிவு நோயாளிகளுக்கான டயாபடீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?. அது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய குடும்பம் அல்லது நட்பு வட்டாரத்தில் யாருக்காவது டயாபடீஸ் இருக்கிறதா?. இந்த சைலன்ட் கில்லரான டயாபடீஸ் இன்று பல வீடுகளுக்குள் புகுந்து விட்டது. கிட்டத்தட்ட 100 மில்லியன் இந்தியர்கள் டயாபடீஸ் பிரச்சனையுடன் வாழ்வதாக கூறப்படுகிறது. மேலும் 136 மில்லியன் நபர்கள் டயாபட்டிஸுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிக் நிலையில் வாழ்வதாகவும், இதனை எளிமையாக கூற வேண்டுமானால் 6 இந்தியர்களில் ஒரு இந்தியர் டயாபடீஸ் அல்லது ப்ரீ டயாபடீஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த நிலை தற்போது மிகவும் பொதுவான ஒரு உடல்நலப் பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் டயாபடீஸ் நோயாளிகள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

டயாபடீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ன மாதிரியான காப்பீட்டை வழங்குகிறது?

டயாபடீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது டயாபடீஸ் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய அனைத்து பொருளாதார செலவுகளுக்கான காப்பீட்டையும் வழங்குகிறது. அதாவது டயாபடீஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தல், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான செலவுகளையும் இந்த டயாபடீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்து கொள்ளலாம். இது குடும்பங்களுக்கு செலவுகளை திறமையாக கையாளுவதற்கு உதவுகிறது.

Also Read: Hand Wash: அடிக்கடி கை கழுவுவது OCD-ன் அறிகுறியா? அளவுக்கு அதிகமாக கை கழுவுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!

இன்சூரன்ஸ் ஏன் அவசியம்?

டயாபடீஸ் தொடர்பான சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட கிளைம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டயாபடிஸ் பிரச்சனை கொண்டவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள்

பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீரிழிவு நோயாளிகளுக்காகவே பிரத்யேகமாக சில திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அவற்றில் ஒரு சிலவற்றை பயன்படுத்தி முதல் நாளில் இருந்தே நாம் காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். மேலும் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் "இன்ஸ்டன்ட் ப்ரீ- எக்ஸிஸ்டிங் திசீஸ்" திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் காத்திருப்பு காலம் ஒரு மாதமாக குறைக்கப்படுகிறது. எனினும் பாலிசி மூலமாக அதிகபட்ச பலன்களை பெறுவதற்கு பாலிசி ஆவணத்தை கவனமாக படிப்பது அவசியம்.

புதிதாக டயாபடீஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான ஆலோசனை

சமீபத்தில் தான் உங்களுக்கு டயாபடீஸ் இருப்பதை கண்டுபிடித்தீர்களா?. அப்படி என்றால் உங்களுக்கான சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு பாலிசியையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கான டயாபடீஸ் தொடர்பான பராமரிப்பு, மருந்துகள் மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் போன்ற அனைத்திற்குமான காப்பீட்டையும் உங்களுடைய பாலிசி தருகிறதா என்பதை நீங்கள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். உங்களுடைய கிளைம்களில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பல கட்டுப்பாடுகள் உள்ளது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் இந்த நீரிழிவு நோய்க்கான பிரீமியம் சற்று அதிகமாகவே இருக்கும்.

சீனியர் சிட்டிசன், நீரிழிவு நோயாளிகளுக்கு உள்ள சவால்கள்

என்னதான் ஹெல்த் இன்சூரன்ஸ் அணுகல் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைத்தாலும் தொடர்ந்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் அதிகளவு பிரீமியம் தொகை அல்லது கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். உங்களுக்கான காப்பீட்டை நிர்ணயிப்பதில் HbA1C அளவுகள் மற்றும் பிற நோய் தொடர்பான சிக்கல்கள் போன்ற காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகிறது.

First Published :

December 03, 2024 10:17 AM IST

Read Entire Article