தொடர்ந்து சுத்தம் செய்தாலும் கூட, அந்த பகுதியில் தூசி மற்றும் பாக்டீரியாக்கள் குவிந்துவிடும்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 3, 2024, 12:13 PM IST Published by
Sivaranjani E
01
தனிப்பட்ட சுகாதாரம் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பெரும்பாலான மக்கள் தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினாலும், உடலின் ஒரு பகுதி மட்டும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. அது வேறொன்றுமில்லை வயிற்றின் தொப்புள் பகுதிதான்.
02
தொடர்ந்து சுத்தம் செய்தாலும் கூட, அந்த பகுதியில் தூசி மற்றும் பாக்டீரியாக்கள் குவிந்துவிடும். 2012 ஆம் ஆண்டில் PLOS One இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தொப்புள் பகுதியில் 2,368 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன, அவற்றில் 1,458 இனங்கள் விஞ்ஞானிகளுக்கு இதற்கும் முன் தெரியாதவையாக இருந்துள்ளன.
03
இந்த பகுதி அதிகமாக வியர்வைக்கு ஆளாகிறது. அதுமட்டுமன்றி அதன் ஆழமற்ற கட்டமைப்பின் காரணமாக முழுமையாக சுத்தம் செய்வது கடினம். இதன் விளைவாக, அது துர்நாற்றத்தை வெளியிடலாம் மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கான இடமாக மாறலாம்.
04
விஞ்ஞான ரீதியாக, தொப்புள் என்பது பிறந்த பிறகு வெட்டப்படும் தொப்புள் கொடியின் ஒரு வடு. பெரும்பாலான மக்களுக்கு, அது உள்ளே இருக்கும். அவ்வாறு இருப்போருக்கு, தூசி மற்றும் பாக்டீரியாக்கள் குவிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அரிதாக, தொப்புள் கொடி பிரச்சனை இருப்பின் அது வெளிப்புற தொப்புளில் தெரியலாம். அப்படி தெரியும் போது துர்நாற்றம், நீர்க்கசிவு, சிவந்து இருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
05
டொரொண்டோவில் உள்ள DLK காஸ்மெடிக் டெர்மடாலஜி அண்ட் லேசர் கிளினிக்கின் தோல் மருத்துவர்கள் பேசுகையில், அதிக எடை கொண்டவர்கள், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அல்லது உட்பகுதியில் தொப்புள் உள்ளவர்களுக்கு, வயிற்றுப் பகுதியில் பாக்டீரியா வளர்ச்சிக்கு ஏற்றது என்று விளக்குகிறார்கள். வயிற்றுப் பகுதியை திறம்பட சுத்தம் செய்ய, சூடான சோப்பு நீரில் நனைத்த துணியைப் பயன்படுத்தி மெதுவாக சுத்தம் செய்யவும்.
06
உங்கள் வயிற்றுப் பகுதியில் அரிப்பு, சிவத்தல், வலி அல்லது துர்நாற்றம் ஏற்பட்டால், தொற்றுகள் மோசமடையாமல் தடுக்க உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
- FIRST PUBLISHED : December 3, 2024, 12:13 PM IST
நீங்க மணிக்கணக்கில் குளித்தாலும் இந்த ஒரு பகுதி எப்போதும் அழுக்காதான் இருக்கும்.. எது தெரியுமா?
தனிப்பட்ட சுகாதாரம் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பெரும்பாலான மக்கள் தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினாலும், உடலின் ஒரு பகுதி மட்டும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. அது வேறொன்றுமில்லை வயிற்றின் தொப்புள் பகுதிதான்.
MORE
GALLERIES