சிலர் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கூட அறியாமல் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு நாளை கழிக்கின்றனர். இப்படித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் எனில் நிச்சயம் இந்த 10 அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- 3-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 26, 2024, 9:25 PM IST Published by
Sivaranjani E
01
![நீங்கள் இயல்பை விட அதிக சோர்வாக உணர்கிறீர்கள், சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது எனில் உடனே உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம் நீங்கள் தேர்வு செய்யும் உணவுகள்தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகள்தான் தினசரி உடல் இயக்கத்தை தீர்மானிக்கிறது. எனவேதான் மருத்துவர்கள் சமச்சீரான உணவுமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் பலர் ஆரோக்கியத்தை கடந்து சுவைக்காக உணவுகளை உட்கொள்கின்றனர். சிலர் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கூட அறியாமல் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு நாளை கழிக்கின்றனர். இப்படித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் எனில் நிச்சயம் இந்த 10 அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். நீங்கள் இயல்பை விட அதிக சோர்வாக உணர்கிறீர்கள், சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது எனில் உடனே உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம் நீங்கள் தேர்வு செய்யும் உணவுகள்தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகள்தான் தினசரி உடல் இயக்கத்தை தீர்மானிக்கிறது. எனவேதான் மருத்துவர்கள் சமச்சீரான உணவுமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் பலர் ஆரோக்கியத்தை கடந்து சுவைக்காக உணவுகளை உட்கொள்கின்றனர். சிலர் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கூட அறியாமல் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு நாளை கழிக்கின்றனர். இப்படித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் எனில் நிச்சயம் இந்த 10 அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.](https://images.news18.com/tamil/uploads/2024/12/eating-food-1-2024-12-8502c271742084ae360091530b3617ce.jpeg?impolicy=website&width=700&height=700)
நீங்கள் இயல்பை விட அதிக சோர்வாக உணர்கிறீர்கள், சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது எனில் உடனே உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம் நீங்கள் தேர்வு செய்யும் உணவுகள்தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகள்தான் தினசரி உடல் இயக்கத்தை தீர்மானிக்கிறது. எனவேதான் மருத்துவர்கள் சமச்சீரான உணவுமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் பலர் ஆரோக்கியத்தை கடந்து சுவைக்காக உணவுகளை உட்கொள்கின்றனர். சிலர் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கூட அறியாமல் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு நாளை கழிக்கின்றனர். இப்படித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் எனில் நிச்சயம் இந்த 10 அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
02
உடல் எடை குறைவு : நீங்கள் தினமும் 3 வேளை தவறாமல் சாப்பிடுகிறீர்கள். ஆனாலும் உடல் எடை கூடாமல் இருக்கிறீர்கள் எனில் நீங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடவில்லை என்றே அர்த்தம். அதாவது நீங்கள் உயரத்திற்கும் வயதிற்கும் ஏற்ப எவ்வளவு உடல் எடை இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதே பிஎம்ஐ என்பார்கள். அதன்படி 19-39 வயதுக்கு உட்பவர்கள் 5.8 அடி உயரம் கொண்ட ஆண்கள் 65 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். பெண்ணாக இருப்பின் 55 கிலோ இருக்க வேண்டும். நீங்கள் இந்த வரையறைக்குக் கூழ் இருக்கிறீர்கள் எனில் போதுமான ஊட்டச்சத்துடன் உணவை உட்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
03
முடி உதிர்வு பிரச்சனை : அதிகமாக முடி உதிர்கிறது, சீப்பை கொண்டு தலை வாரினாலே கொத்துக்கொத்தாக முடி உதிர்கிறது எனில் நிச்சயம் அது ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கும். ஏனெனில் முடி உதிர்வும் போதுமான ஊட்டச்சத்து இல்லாததாலேயே நிகழ்கிறது. குறிப்பாக முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து, ஸிங்க், விட்டமின் டி அல்லது ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகிவை உணவின் மூலமே அதிகமாக கிடைக்கும். அவை போதுமான அளவு கிடைக்காத போது முடி உதிர்வு இருக்கும். எனவே உடனே உங்கள் உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் இது.
04
சோர்வு மற்றும் பலவீனம் : அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் அல்லது பலவீனமாக உணர்கிறீர்கள் எனில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இரும்புச்சத்து, விட்டமின் பி12, விட்டமின் டி ஆகியவை குறைவாக இருந்தால் இவ்வாறு அறிகுறிகள் இருக்கும். அதுமட்டுமன்றி போதிய தூக்கம் இருந்தபோதிலும் சோர்வாக இருக்கிறீர்கள் எனில் ஊட்டச்சத்து குறைபாடே காரணம். எனவே சமச்சீரான உணவு முறைக்கு மாறுங்கள் நிச்சயம் மாற்றம் காண்பீர்கள்.
05
பசியின்மை அல்லது ருசியில் மாற்றம் : உங்கள் பசியில் திடீரென மாற்றத்தை உணர்கிறீர்கள், உங்கள் ருசியில் சில மாற்றங்கள் தெரிகிறது எனில் அதுவும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிகழ்கிறது. அதாவது நீங்கள் சத்துக்கள் இல்லாத உணவின் மீது ஈர்ப்பு கொள்கிறீர்கள் எனில் அதுவும் ஊட்டச்சத்து இல்லா உணவுமுறைக்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனவே உடனே ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உங்களுக்கான டயட் சாட்டை தயார் செய்வது அவசியம்.
06
மனநிலையில் மாற்றங்கள் : உங்கள் மனநிலை அடிக்கடி மாறுகிறது எனில் அதற்கும் ஊட்டச்சத்து குறைபாடே காரணம். 2020 ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது மனநிலையில் மாற்றங்களை உணர்வதாக கூறப்பட்டுள்ளது. அது நம் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே நாம் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதும் நம் மனநிலையை முடிவு செய்வதாக கூறுகிறது. ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினால் மனநலனும் நேர்மறையான முறையில் இருக்கும்.
07
காயங்கள் மெதுவாக ஆறுவது : உங்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு அது ஆறுவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கிறது எனில் அதுவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையையே குறிக்கிறது. அதாவது ஊட்டச்சத்து குறையும்போது காயம் ஆறுவதற்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றாக்குறையாக இருக்கும்போது அந்த காயம் ஆற தாமதமாகும். எனவே அதற்கு தேவையான வைட்டமின் ஏ, சி, சி மற்றும் மினரல்கள் போதுமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் காயங்கள் ஆற தாமதமாகும்.
08
மலச்சிக்கல் : அடிக்கடி மலம் கழிக்கவில்லை எனில் அதுவும் போதுமான கலோரிகள் எடுத்துக்கொள்ளாததன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறைவான உணவுக்கு குறைவான கழிவுகளையே செரிமான அமைப்பு வெளியேற்றும். இதனால் ஒரு வாரத்திற்கு 3 முறை மட்டுமே மலம் கழிப்பீர்கள். அதுவும் மிகவும் கடினமாகதாக இறுகிய நிலையிலேயே மலம் வெளியேறும். இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கிறது எனில் போதிய ஊட்டச்சத்து இல்லை என்றே அர்த்தம். இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் பெண்களே அதிகமாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
09
அடிக்கடி உடல்நலக்கோளாறுகள் : அடிக்கடி உடல் நலக்கோளாறுகளால் அவதிப்படுகிறீர்கள் எனில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஸிங்க், செலினியம், விட்டமின் ஏ, சி ஆகியவை முக்கிய ஊட்டச்சத்துகளாகும். இந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் இருக்கிறது எனில் அடிக்கடி நோய் தொற்றுகளுக்கும், உடல் நலக்கோளாறுகளுக்கும் ஆளாகக்கூடும்.
10
சருமப்பிரச்சனைகள் : நீங்கள் ஊட்டச்சத்துமிக்க சமச்சீரான உணவு முறையை பின்பற்றவில்லை எனில் அதன் அறிகுறி உங்கள் சருமத்திலேயே தெரியும். சரும வறட்சி, தோல் உரிதல் , பொலிவிழத்தல் ஆகியவை அதன் அறிகுறிகளாகும். நீங்கள் போதிய ஃபேட்டி ஆசிட் மற்றும் விட்டமின் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க தவறுகிறீர்கள் எனில் சருமத்தில் அதன் பிரதிபலன் இருக்கும். 2018 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் வயது மற்றும் பிஎம்ஐ கணக்கீடுகள் இல்லாமல் பொதுவாக ஊட்டச்சத்துக்கும் சரும பிரச்சனைகளுக்குமான தொடர்பை பதிவு செய்துள்ளது. அதில் போதுமான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்கிறீர்கள் எனில் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம் என்கிறது.
11
நம் ஆரோக்கியம்தான் நமக்கான பெரிய சொத்து. அதை நீங்கள் ஊட்டச்சத்து இல்லா உணவு முறையால் சிதைக்கிறீர்கள் எனில் நிச்சயம் அதற்கான தாக்கத்தையும் அனுபவிக்கக்கூடும். எனவே மோசமான உணவு முறையால் அதை வருத்தாமல் ஆரோக்கியமான உணவு முறையால் உங்கள் உடலை ஆராதியுங்கள். எனவே உங்கள் உடல் ஒலிக்கும் சத்தத்தை உணர ஆரம்பியுங்கள். எதை சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பதில் தெளிவான முடிவை எடுங்கள். ஆரோக்கியமான உணவுமுறையால் ஊட்டச்சத்து குறைபாட்டை மட்டும் நீங்கள் தவிர்க்கவில்லை. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக கழிப்பதற்கான தொடக்கமாக செய்யுங்கள். இது உங்கள் வாழ்விலும் முன்னேற்றத்தை கொடுக்கும்.
- FIRST PUBLISHED : December 26, 2024, 9:25 PM IST
நீங்கள் ஊட்டச்சத்தான உணவு முறையை கடைப்பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்.!
நீங்கள் இயல்பை விட அதிக சோர்வாக உணர்கிறீர்கள், சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது எனில் உடனே உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம் நீங்கள் தேர்வு செய்யும் உணவுகள்தான் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. நீங்கள் சாப்பிடும் உணவுகள்தான் தினசரி உடல் இயக்கத்தை தீர்மானிக்கிறது. எனவேதான் மருத்துவர்கள் சமச்சீரான உணவுமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் பலர் ஆரோக்கியத்தை கடந்து சுவைக்காக உணவுகளை உட்கொள்கின்றனர். சிலர் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கூட அறியாமல் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு நாளை கழிக்கின்றனர். இப்படித்தான் நீங்களும் இருக்கிறீர்கள் எனில் நிச்சயம் இந்த 10 அறிகுறிகளை அனுபவிக்கக் கூடும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
MORE
GALLERIES