Music |தமிழில் ‘தெருக்குரல்’ அறிவு போன்ற பாடகர்களின் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தனியிசை கலைஞர்களின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இசைக்கும், ரசிகர்களுக்குமான தொடர்பு எப்போதும் பிரிக்க முடியாதது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 7, 2025, 5:29 PM IST Published by
Khalilullah S
01
இந்திய திரைப்படங்களில் இசை என்பது தவிர்க்க முடியாத விஷயம். இசையைக் கேட்க இன்றைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கான ரூபாயை ‘கான்சர்ட்’களில் செலவிடுகிறார்கள். புகழ்பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசாஞ்ச் மற்றும் அர்ஜித் சிங் போன்றோர் ஒரு பாடலுக்கு லட்சங்கள் முதல் கோடிகள் வரை சம்பாதிக்கிறார்கள். இன்றைக்கு தனியிசை பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
02
தமிழில் ‘தெருக்குரல்’ அறிவு போன்ற பாடகர்களின் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தனியிசை கலைஞர்களின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இசைக்கும், ரசிகர்களுக்குமான தொடர்பு எப்போதும் பிரிக்க முடியாதது.
03
அந்த வகையில் தமிழகத்திலிருந்து கிளம்பிச் சென்ற ‘இசைப் புயல்’ 2 ஆஸ்கர் விருது, 2 கிராமி விருதுகளைப் பெற்று உலகத்தையே தமிழர்களை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. அவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவின் பணக்கார இசையமைப்பாளர்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
04
சென்னையில் பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின் சிறு வயது பெயர் திலீப்குமார். இவரது தந்தை ஆர்.கே.சேகர். தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினார். தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆன்மிகத்தை நோக்கி நகர்ந்தவர், இஸ்லாத்துக்கு மாறினார்.
05
1991-ல் மணிரத்னத்தின் ‘ரோஜா’ படத்தின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியவர், அண்மையில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படம் வரை இசையில் முத்திரை பதித்து வருகிறார். GQ INDIA வெளியிட்டுள்ள தகவலின்படி 57-வயதான ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு ரூ.1728 கோடி எனக் கூறப்படுகிறது. ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- FIRST PUBLISHED : January 7, 2025, 5:29 PM IST
நிமிடங்களில் கோடிக்கணக்கில் ஊதியம்…உலக அரங்கில் ‘கெத்து’ காட்டும் பிரபலம்… யார் இந்த தமிழர்?
இந்திய திரைப்படங்களில் இசை என்பது தவிர்க்க முடியாத விஷயம். இசையைக் கேட்க இன்றைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கான ரூபாயை ‘கான்சர்ட்’களில் செலவிடுகிறார்கள். புகழ்பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசாஞ்ச் மற்றும் அர்ஜித் சிங் போன்றோர் ஒரு பாடலுக்கு லட்சங்கள் முதல் கோடிகள் வரை சம்பாதிக்கிறார்கள். இன்றைக்கு தனியிசை பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
MORE
GALLERIES