இந்த பிஸியான வாழ்க்கையில், நீடித்த ஆற்றலுடன் இருப்பது நம்மை நமது இலக்கை அடைய உதவியாக இருக்கும். எனவே, நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், அன்றாடப் பணிகளை மேற்கொண்டாலும் உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கக்கூடிய சரியான உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
அத்தகைய ஆற்றலின் மூலமாக இருக்கும் 6 உணவுகள் பற்றி தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். இந்த உணவுகளை தினசரி உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, உங்களது ஆற்றல் பராமரிக்கப்படுவதோடு, உங்களது சோர்வை நீக்கி நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும். காலை முதல் இரவு வரை உங்கள் ஆற்றலை சீராக வைத்திருக்க உதவும் ஆறு சூப்பர் உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1. ஓட்ஸ்
கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்கள் நிறைந்த ஓட்ஸ், ஒரு அற்புதமான முழு தானியமாகும். ஓட்ஸ், ஆற்றலை மெதுவாக வழங்குவதால், நீடித்த ஆற்றலை பராமரிக்க உதவுகிறது. மேலும், ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் என்ற கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுவதால், ஆற்றலை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஓட்ஸுடன் உங்களது நாளை தொடங்குவது எளிதான மற்றும் ஆரோக்கியமான தேர்வாகும். சில கூடுதல் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக நீங்கள் ஓட்ஸுடன் பழங்கள், நட்ஸ்கள் அல்லது விதைகளை அவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
2. வாழைப்பழங்கள்
ஆற்றலுக்கான சிறந்த மற்றும் விரைவான மூலமாக வாழைப்பழங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும். கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்கும் வாழைப்பழங்களில், குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகளும் அடங்கியுள்ளன. இவை, உங்கள் உடலுக்கு உடனடி சக்தியை தருகின்றன. அதுமட்டுமின்றி, வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதோடு, தசை சோர்வைத் தவிர்க்கவும் உதவுகிறது. தினமும் காலை நேரத்தில் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது, நம்மை நீண்ட நேரம் முழுமையாக உணர வைப்பதோடு, அதிக ஆற்றலைப் பெறவும் உதவுகிறது.
3. சியா விதைகள்
சியா விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், ஆற்றலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இதில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன்கள், நார்ச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகிறது. சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக ஜீரணிக்கப்படுவதை மெதுவாக்கி, உங்களுக்கு நிலையான சக்தியை வழங்க உதவுகிறது. நீங்கள் சியா விதைகளை ஸ்மூத்திகளில் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். சாலட்கள், பாதாம் பால் அல்லது தயிரில் இரவு முழுவதும் ஊறவைத்து சியா புட்டிங் செய்யலாம். இது நீடித்த ஆற்றலை வழங்கும் எளிதான உணவாக இருக்கும்.
4. கீரைகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற இலை கீரைகளில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளன. இவை உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும் அவசியமான ஊட்டச்சத்துக்களாகும். மேலும், இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலை மேம்படுத்த உதவுகின்றன. உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவில் இலை கீரைகளை சேர்ப்பது அல்லது அவற்றை ஸ்மூத்தியாக சேர்த்துக்கொள்வது, நீடித்த ஆற்றலைப் பெறுவதை உறுதி செய்கிறது. கீரைகள், குயினோவா, லீன் புரோட்டீன் மற்றும் அவோகேடோ ஆகியவற்றை கொண்டும் உங்களது ஆற்றலை கணிசமாக அதிகப்படுத்தலாம்.
5. பாதாம்
ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகளுக்கு பாதாம் விரைவான ஆற்றலை வழங்குவதற்கான ஒரு சிறந்த மூலமாகும். ஆற்றலை அதிகரிப்பதற்கும், பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதாம் ஒரு சிறந்த உணவு. பாதாமில் உள்ள மெக்னீசியம், செல்லுலார் அளவில் உங்கள் ஆற்றல் உற்பத்திக்கு உதவுவதோடு, தசைகளுக்கு பலத்தை கொடுக்கிறது மற்றும் சோர்வை குறைக்கிறது. ஒரு சிறிய கைப்பிடி பாதாம், உங்கள் ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். கூடுதல் சுவைக்காக, பாதாமை வறுத்து உண்ணலாம் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
6. சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் அற்புதமான மூலமாகும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாகும். அவற்றின் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக ஜீரணமாகின்றன. இது உங்கள் உடலுக்கும், மூளைக்கும் குளுக்கோஸின் நிலையான விநியோகத்தை தந்து, சீரான ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. எனவே நீங்கள் சீரான ஆற்றலை பெற இது உதவியாக இருக்கும்.
மேலும், சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமையலில் பல வகைகளில் பயன்படுத்தலாம். இதன் ஆற்றல் மூலத்திற்காகவே, இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு திருப்தியான உணர்வை தருவதோடு, நீடித்த உற்சாகத்தையும் வழங்குகிறது.
உங்கள் தினசரி உணவில் இந்த ஆறு அசத்தலான உணவுகளைச் சேர்ப்பது, உங்களது தினசரி ஆற்றலைப் பராமரிக்கவும், சோர்வைக் குறைக்கவும், நாள் முழுவதும் உற்சாகமாக உணரவும் வைக்கும். ஓட்ஸின் நீண்ட நேர ஆற்றல் முதல் வாழைப்பழத்திலிருந்து கிடைக்கும் விரைவான புத்துணர்ச்சி வரை, இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு பல நன்மைகளைத் தரும். எனவே, இந்த சூப்பர் உணவுகளை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம், சீரான ஆற்றலை பராமரிக்கலாம்.
First Published :
December 29, 2024 11:46 AM IST