நடைப்பயிற்சி:
நீங்கள் முதல் முறையாக அல்லது நீண்ட நேரத்திற்குப் பிறகு உடற்பயிற்சியைத் தொடங்கினால், நடைப்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். வேகமாக நடப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூட்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த எளிய பயிற்சியின் மூலம் பயனடையலாம்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்:
இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நேரம் மற்றும் வேகத்தின் அடிப்படையில் கலோரிகளை எரிக்கிறது.
பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அன்றாட நடவடிக்கைகளில் நடைப்பயிற்சியை ஒருங்கிணைப்பது எளிதானது, அதாவது வேலைகளுக்கு இடையில் நடப்பது போன்றவை.
தீமைகள்: அதிக கலோரிகளை எரிக்க ஓட்டம் அல்லது சைக்கிள் ஓட்ட எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட, அதிக நேரம் எடுக்கலாம்.
ஆரம்பநிலையில் உள்ளவர்கள், நோய்களில் இருந்து மீண்டு வருபவர்கள் அல்லது சுறுசுறுப்பாக இருக்க மன அழுத்தமில்லாத முறையைத் தேடும் நபர்கள் ஆகிய அனைவருக்கும் இது பொருந்தும்.
ஓட்டப்பயிற்சி:
ஓட்டப்பயிற்சி ஆனது மிதமான தீவிரமான வொர்க்அவுட்டை வழங்குகிறது. குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். 2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், <6 mph என்ற வேகத்தில் ஒரு நாளைக்கு 5-10 நிமிடங்கள் ஓடுவது, இதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தை குறைக்கிறது.
ஓட்டப்பயிற்சி நன்மைகள்:
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் எடை பராமரிப்புக்கு உதவுகிறது.
தசைகளை வலுப்படுத்துகிறது, குறிப்பாக லெக்ஸ் மற்றும் கோர்களில் கவனம் செலுத்துகிறது.
மனத் தெளிவை அதிகரிக்கிறது மற்றும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது.
தீமைகள்: இது மூட்டுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எனவே மூட்டுவலி அல்லது முழங்கால் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
உடல் எடையை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளுக்கு மாற விரும்பும் நபர்களுக்கு இது பொருந்தும்.
சைக்கிள் ஓட்டுதல்:
சைக்கிள் ஓட்டுதல் ஒரு அற்புதமான உடற்பயிற்சி ஆகும். சைக்கிள் ஓட்டுவது மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு சரியான தேர்வாக அமைகிறது. சைக்கிள் ஓட்டுவதால் மூட்டுகளில் அழுத்தத்தை குறைக்கிறது, இதன் காரணமாக முழங்கால் அல்லது இடுப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள்:
மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சரியானது.
தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது.
கலோரிகளை எரிக்கிறது, குறிப்பாக அதிக வேகத்தில் சைக்கிள் ஓட்டும் போது.
இதை போக்குவரத்தாக மாற்றுவதன் மூலம் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
தீமைகள்: அபாயகரமான சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டுவது காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான உடற்பயிற்சியை விரும்புபவர்களும், மூட்டுப் பிரச்சனைகள் உள்ளவர்களும் மற்றும் உடற்பயிற்சி பிரியர்களுக்கும் குறைந்த தாக்கம் கொண்ட இந்த உடற்பயிற்சியை விரும்புகின்றனர்.
First Published :
January 02, 2025 6:12 PM IST