நடிகர் அல்லு அர்ஜுனின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

1 week ago 14

Last Updated:January 04, 2025 9:58 PM IST

ஆமிர் கான் நடித்த தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை "புஷ்பா 2" திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

News18

நடிகர் அல்லு அர்ஜுன் தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் நடித்துள்ள "புஷ்பா 2" திரைப்படம் தற்போது உலக அளவில் 1800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ஆமிர் கான் நடித்த தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை "புஷ்பா 2" திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்துடைய அடுத்த பாகம் விரைவில் படமாக்கப்பட உள்ள நிலையில், பிரமாண்ட வெற்றியால் "புஷ்பா 2" திரைப்பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே அல்லு அர்ஜுன் தனது பிட்னஸிற்காக அதிகம் பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து தகவல்களை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது-

"காலையில் 2 முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்வேன். இது புரோட்டின் தேவையை நிவர்த்தி செய்யும். மதிய உணவு மற்றும் இரவு உணவு பிடித்தமானவற்றை சாப்பிடுவேன்.

இதையும் படிங்க - Game changer | விஜய் தான் முதல் சாய்ஸ்… ஷங்கர் கன்டிஷனால் ‘கேம் சேஞ்சர்’ கைமாறிய கதை!

ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் 45 நிமிடங்கள் ஓடுவேன். இது என்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. உடல் நலனை போன்று மன நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். பால் பொருட்களை தவிர்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

First Published :

January 04, 2025 9:58 PM IST

Read Entire Article