Last Updated : 11 Jan, 2025 05:18 AM
Published : 11 Jan 2025 05:18 AM
Last Updated : 11 Jan 2025 05:18 AM
தெலங்கானாவில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம், ராயகடா பகுதியை சேர்ந்த 20 தொழிலாளர்கள் வேலைக்காக ஒரு பேருந்தில் ஹைதராபாத் நோக்கி புறப்பட்டனர். இவர்களின் பேருந்து நேற்று அதிகாலையில் தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டம், ஐலாபுரம் பகுதியில் வரும்போது, சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிக வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சூர்யாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சிவம்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
FollowFOLLOW US
தவறவிடாதீர்!
- வெளிநாடுகளில் பணம், சொத்து குவிப்பவர்களை கண்டறிய ‘சில்வர்’ நோட்டீஸ் அறிமுகம் செய்தது இன்டர்போல்
- ஜானி வாக்கர் விஸ்கி விற்பனை தடையை நீக்க 15,000 டாலர் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு
- ரூ.210 கோடிக்கு மின்சார கட்டணம்: இமாச்சல் தொழிலதிபர் அதிர்ச்சி
- போதைப் பொருள் பற்றி தகவல் கூறிய 970 பேருக்கு குஜராத்தில் ரூ.11 கோடி பரிசு
Sign up to receive our newsletter in your inbox every day!