Last Updated:January 08, 2025 1:46 PM IST
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவது தொற்றுகள் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை தடுப்பதோடு நம்மை ஆரோக்கியமாக வைக்கும்.
நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு தினசரி டயட்டில் பழங்களை சேர்த்து கொள்வது ஒரு ஆரோக்கியமான வழியாகும். மும்பை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ஃபௌசியா அன்சாரி கூறுகையில், "பழங்கள் வைட்டமின்ஸ், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாசியம், ஃபோலேட், கார்போஹைட்ரேட்ஸ், நீர், ஃபோலிக் ஆசிட், ஜிங்க் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன" என்கிறார்.
எனவே பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவது தொற்றுகள் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை தடுப்பதோடு நம்மை ஆரோக்கியமாக வைக்கும். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லும் தேவையே இருக்காது என்று நிபுணர்கள் கூறும் நிலையில், ஆப்பிளுடன் போட்டியிட கூடிய பழங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி எழுவது இயல்பு. இதற்கான பதில் ஆம் என்பதே. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத், ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆப்பிளை போலவே மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையை அது ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.
- வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ப்ரீபயாடிக் ஆகும், இது குடலில் ஆரோக்கியமான உயிரினங்களை உருவாக்க உதவுகிறது.
- வாழைப்பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது
- வாழைப்பழங்களில் சோடியம் குறைவாக உள்ளதால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது. அதே போல சர்க்கரை நோயாளிகளும் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என்றாலும் மிதமான அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.
- வாழைப்பழங்கள் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்
- வாழைப்பழங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்து என்பதால் சீரான டயட் பின்பற்றினால் நீங்கள் ஒரு நாளைக்கு 1-2 வாழைப்பழங்களை சாப்பிடலாம்.
இதனிடையே ஃபௌசியா அன்சாரி பேசுகையில், வாழைப்பழங்களை எளிதில் மென்று சாப்பிடலாம் என்பதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் ஏற்ற ஆரோக்கிய தேர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மலச்சிக்கலை தடுப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, மனநிலையை சிறப்பாக வைப்பது மற்றும் ஆற்றலை அதிகரிப்பது, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, தசை ஆரோக்கியத்தை வலுவாக வைப்பது மற்றும் சருமத்தை சேதமடையாமல் பாதுகாப்பது போன்ற பல நன்மைகளை வாழைப்பழங்கள் வழங்குவதாக அன்சாரி குறிப்பிட்டார்.
Also Read | Foods: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 10 கசப்பு, புளிப்பு உணவுகள்..!
எனினும் வாழைப்பழம் சாப்பிட விரும்பும் ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. நீரிழிவு பிரச்சனை தீவிரமாக உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் வாழைப்பழங்களை எடுத்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.தங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு மிதமான அளவில் சாப்பிடலாமா அல்லது முற்றிலும் தவிர்த்து கொள்ள வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும், இது நாளடைவில் பிற உடல்நல கோளாறுகள்ஏற்பட வழிவகுக்கும் என்றார்.
பழங்கள் எடுத்து கொள்வது ஆரோக்கியமானது என்றாலும், அவற்றில் இயற்கை இனிப்பு உள்ளதால், அளவோடு சாப்பிட வேண்டும். எனவே உங்கள் டயட் பழக்கங்களில் தீவிர மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று அன்சாரி கூறினார்.
First Published :
January 08, 2025 1:46 PM IST