தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மாரடைப்பால் காலமானார்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 19, 2024, 7:08 PM IST Published by
Karthi K
01
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
02
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் இயக்குனர் சங்கர் தயாள் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 54, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
03
மேலும் இவர் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதற்கான பத்திரிகையாளர் (செய்தித்தாள் மட்டும்) சந்திப்பு இன்று நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மார்க் ஸ்டுடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
04
அதற்கு வந்த இடத்தில் நெஞ்சுவலி என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
05
இதன்பிறகு, கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்க்கையில் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
- FIRST PUBLISHED : December 19, 2024, 7:07 PM IST
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி.. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
MORE
GALLERIES