Updated: Wednesday, January 8, 2025, 14:17 [IST]
நம் தமிழ்நாட்டில் அரசு எண்ணற்ற பல திட்டங்களை மக்களின் முன்னேற்றத்திற்காக அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கும், ஆண்களுக்கு வெவ்வேறு நல திட்டங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் பல உள்ளன. அந்தவகையில், சொந்த தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், சொந்த தொழில் செய்வதற்கு மானிய உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் அவர்கள் சொந்த தொழில் செய்ய ஏதுவாக கடன் வழங்குவது உள்ளிட்ட நன்மையான திட்டங்களும் உள்ளன.
அதன்படி தற்போது தமிழ்நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஒரு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7 லட்சம் முதல் 11 லட்சம் வரை மானியம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
எனவேதான் தமிழக அரசு பல மானிய உதவி திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன் படி தற்போது மீன், இறால் வளர்ப்பில் நல்ல லாபம் தரும் காலமாக இருப்பதால், இது அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக உள்ளது. எனவே, நாளுக்கு நாள் டிமான்ட் அதிகரித்து வருகிறது. எனவேதான் மீன் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
HDFC வங்கி கொடுக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்.. பெண்களே உங்களுக்குத்தான் சூப்பர் ஜாக்பாட்..!!
அந்த வகையில் மீன், இறால் மற்றும் கடல் உயிரினங்களை தனியாக குட்டை அமைத்து வளர்க்கவும் இதன்மூலம் பல லட்சம் வருவாயை சம்பாதிக்கவும் தமிழக அரசின் மீன்வளத்துறை ஊக்குவித்துள்ளது. தற்போது கடலில் பிடித்தவுடன் இறாலானது சுமார் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
எனவே, தற்போது இந்த மீன் இறால் வளர்ப்பை செய்ய ஊக்குவிக்கும் வகையில் மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சிலசமயங்களில் மழை, புயல், காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. அதேபோல், வருடத்தில் 40 நாட்கள் மீன் பிடிக்க தடை காலமும் உள்ளது. அந்த சமயத்தில், வளர்ப்பு மீன் மற்றும் இறால்களுக்கு கடும் கிராக்கி உள்ளது. எனவே தனியாக இறால் பன்னை அமைத்து விற்பனை செய்ய தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது.
இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறால் வளர்ப்பதற்கு போதுமான அளவு நீர் ஆதாரம் இல்லையா?? போதுமான நிலம் இல்லையா? உங்களுக்காக பயோ பிளாக் (உயிர் கூழ்மம்] தொழில்நுட்பம் மூலம் இறால் வளர்க்கலாம் என்று தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோயம்புத்தூர் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. Capgemini மெகா முதலீடு, அதுவும் 'இந்த' இடத்தில்..!
எனவே, ஆர்வமுள்ள மக்கள் இந்த தொழில்நுட்பத்தின் படி குறைந்த நிலப்பரப்பில் (0.1 ஹெக்டேர்) குறைவான நீரினை உபயோகப்படுத்தி அதிக அளவு இறால் உற்பத்தி செய்யலாம். இத்திட்டம் திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த மொத்தம் ரூ.18 லட்சம் செலவாகும். இதில் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ரூ. 7.20 இலட்சமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு ரூ. 10.80 இலட்சமும் மானியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மானியம் போக ஒரு 0.1 ஹெக்டேர் பயோபிளாக் குளத்தில் 3 இலட்சம் இறால் குஞ்சுகளை 90 நாட்கள் வளர்த்தால் 4 முதல் 5 டன் உற்பத்தி கிடைக்கும். எனவே இதனை ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யலாம். இதன்மூலம் வருடத்திற்கு ரூ. 15.00 இலட்சம் வரை வருமானம் ஈட்டலாம் எனவும், இந்த திட்டத்தில் பயன் பெற மீன்வளத்துறை அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Tamilnadu government sea foods prawn cultivation subsidy scheme you will get up to 10 lakh subsidy
Tamilnadu peoples get rs 10 lakhs subsidy of prawan cultivation scheme check here who will eligible for this scheme and how much investment needed