Last Updated:December 24, 2024 2:28 PM IST
ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி 'அமரன்' திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் கெரியரில் மிக அதிகமான வசூலித்த திரைப்படமாக அமரன் மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷின் 55வது படத்தில் இணைகிறார். இந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
சிவகார்த்திகேயன் முன்னணி கேரக்டரில் நடித்த 'அமரன்' திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். தற்போது அவருக்கு நாடு முழுவதும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி 'அமரன்' திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் கெரியரில் மிக அதிகமான வசூலித்த திரைப்படமாக அமரன் மாறியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இது குறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், "என்னுடைய முந்தைய படம் ராணுவ அதிகாரியை பற்றிய படம். என்னுடைய அடுத்த படம் சமூகத்திற்காக உழைத்து அதிகம் பிரபலமடையாத ஹீரோக்களை பற்றியது. அத்தகைய ஹீரோக்களில் ஒருவர்தான் கதாநாயகன் கேரக்டரில் இடம் பெறுவார்" என்று கூறியுள்ளார்.
தனுஷின் 50-ஆவது படமான 'ராயன்' அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து 'இட்லி கடை', 'குபேரா', 'மேஸ்ட்ரோ' மற்றும் இந்தியில் 'தேரே இஷ்க் மெயின்' என்ற படங்களில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
First Published :
December 24, 2024 2:28 PM IST