தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு ஃபர்ஸ்ட் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களும் மாஸாக இருப்பதை அடுத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கி வரும் திரைப்படம் "இட்லி கடை". இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில், நாயகியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு, மீண்டும் தனுஷ் - நித்யா மேனன் ஜோடி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பர்ஸ்ட் போஸ்டரில், தனுஷ் மிகவும் இளமையுடன் இருக்கும் ஒரு போஸ்டர், ராஜ்கிரன் உடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரண் கெளசிக் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
— Wunderbar Films (@wunderbarfilms) January 1, 2025