. நீங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளில் சைக்கிள் ஓட்டினாலும் அல்லது ஒரே இடத்தில் நின்று கொண்டே ஸ்டேஷனரி பைக்கில் சைக்கிளிங் செய்தாலும் இது பல உடல் நலன்களை மற்றும் மன ஆரோக்கியத்தை வழங்குகிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 6, 2025, 1:26 PM IST Published by
Sivaranjani E
01
சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு போக்குவரத்து முறை அல்லது வேடிக்கையான செயல்பாடு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் ஒரு அருமையான வழி. நீங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளில் சைக்கிள் ஓட்டினாலும் அல்லது ஒரே இடத்தில் நின்று கொண்டே ஸ்டேஷனரி பைக்கில் சைக்கிளிங் செய்தாலும் இது பல உடல் நலன்களை மற்றும் மன ஆரோக்கியத்தை வழங்குகிறது. எனவே நீங்கள் தினசரி சைக்கிளிங் செய்வதை கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு காரணங்கள் இங்கே:
02
தசை வலிமையை அதிகரிக்க செய்கிறது: சைக்கிளிங் செய்வது கால்கள், குளுட்ஸ் (glutes) மற்றும் கோர் உட்பட பல்வேறு தசை குழுக்களை (muscle groups) அந்த செயல்பாட்டில் ஈடுபடுத்துகிறது. காலப்போக்கில், இது தசைகளை மிக வலிமையாக்குகிறது மற்றும் உங்கள் உடலின் தோரணை, பேலன்ஸ் மற்றும் ஒட்டுமொத்த நெகிழ்வுத்தன்மையை சிறப்பாக இருக்குமாறு மேம்படுத்துகிறது.
03
நுரையீரல் திறனை அதிகரிக்க செய்யும்: பொதுவாக சைக்கிள் ஓட்டுவதற்கு ரிதமிக் ப்ரீத்திங் (rhythmic breathing) தேவைப்படுகிறது, இது உங்கள் நுரையீரலை பலப்படுத்தி அவற்றின் திறனை மேம்படுத்துகிறது. நுரையீரல் செயல்திறன் அதிகரிப்பதால் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகமும் அதிகரிக்கிறது.
04
மூட்டு ஆரோக்கியம் மேம்படும்: குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியாக கருதப்படும் சைக்கிளிங்கானது ஆர்த்ரைட்டிஸ் அல்லது மூட்டு வலி உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமைகிறது. சைக்கிளிங் செல்வது இது மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது, மேலும் சிறந்த ஆதரவு மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது.
05
இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது: சைக்கிளிங் செல்வது என்பது உங்கள் இதயத்தை பலப்படுத்தி ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. வழக்கமான அடிப்படையில் சைக்கிளிங் செல்வது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை திறம்பட நிர்வகிக்க உதவும்.
06
எடை மேலாண்மை: கலோரிகளை திறம்பட எரித்து உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைக்க சைக்கிளிங் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் தினசரி வழக்கத்தில் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை சேர்த்து கொள்வதன் மூலம், உங்கள் கால்கள் மற்றும் கோர் பகுதியை டோன் ஆகும், இதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும்.
07
மன ஆரோக்கியம்: ஃபிரெஷ்ஷான காற்றில் சைக்கிள் ஓட்டுவது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும். சைக்கிள் ஓட்டும் போது செய்யப்படும் பெடலிங் என்டோர்பின்களை வெளியிடுகிறது, இதன் மூலம் மனநிலை இயற்கையான முறையில் புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை அடைகிறது.
08
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வழக்கமான அடைப்படையில் சைக்கிளிங் செல்வது உடலின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இதன் மூலம் உங்கள் உடல் தொற்றுகளை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது. இது போன்ற சீரான உடற்பயிற்சி உடலுக்கு தேவையான அத்தியாவசிய நோயெதிர்ப்பு உயிரணுக்களின் (immune cells) உற்பத்தியை மேம்படுத்துகிறது.
09
சுற்றுச்சூழலுக்கு உகந்தது: மோட்டார் பொருத்தப்பட்ட போக்குவரத்திற்குமத்தியில் சைக்கிள் ஓட்டுவதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வொர்க்அவுட்டில் ஈடுபடும் அதே நேரம் கார்பன் உமிழ்வை குறைத்து, சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைக்கவும் நீங்கள் பங்களிக்கிறீர்கள்.
- FIRST PUBLISHED : January 6, 2025, 1:26 PM IST
தசை வலி, மூட்டு வலி.. சைக்கிளிங் செய்வதே சிறந்த வைத்தியம்.. ஏன் தெரியுமா..?
சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு போக்குவரத்து முறை அல்லது வேடிக்கையான செயல்பாடு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் ஒரு அருமையான வழி. நீங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பாதைகளில் சைக்கிள் ஓட்டினாலும் அல்லது ஒரே இடத்தில் நின்று கொண்டே ஸ்டேஷனரி பைக்கில் சைக்கிளிங் செய்தாலும் இது பல உடல் நலன்களை மற்றும் மன ஆரோக்கியத்தை வழங்குகிறது. எனவே நீங்கள் தினசரி சைக்கிளிங் செய்வதை கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு காரணங்கள் இங்கே:
MORE
GALLERIES